TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேகத் தமிழ்க் கல்வித் தளம் நமது நினைவுக்கூர்க. 8-ஆம் வகுப்பு தமிழ் புதிய சமச்சீர் பாடப்புத்தகத்தில் இயல் இரண்டில் இடம்பெற்றுள்ள கவிஞர் தமிழ்ஒளி எழுதிய 'பட்ட மரம்' கவிதைப்பேழையின் பாடல்கள், அரும்பொருள், ஆசிரியர் குறிப்பு மற்றும் வினா-விடைகள் கீழே விரிவாகத் தரப்பட்டுள்ளன.
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
கவிஞர் தமிழ்ஒளி (1924 - 1965) - TNPSC குறிப்புகள்
1. அடிப்படை விவரங்கள்
| செய்தி | விவரம் |
|---|---|
| இயற்பெயர் | விஜயரங்கம் (பெற்றோர் இவரை 'பட்டுராசு' என்றும் அழைத்தனர்) |
| பிறந்த காலம் & இடம் | செப்டம்பர் 21, 1924 | ஆடூர் (ஆடூர் அகரம்), கடலூர் மாவட்டம் |
| மறைவு | மார்ச் 24, 1965 |
| சிறப்புப் பெயர்கள் / தொடர்புகள் | பாரதியாரின் வழித்தோன்றல், பாரதிதாசனின் மாணவர், 'பொதுவுடைமைக் கவிஞர்' |
| கல்வி | புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளி, கலவைக் கல்லூரி, கரந்தைத் தமிழ்க் கல்லூரி (புலவர் படிப்பு) |
2. முக்கியப் படைப்புகள் (நூல்கள்)
சிறுகாப்பியங்கள் / கவிதை நூல்கள்:
- நிலைபெற்ற சிலை (இவரின் முதல் காப்பியம் - எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
- வீராயி (ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் காப்பியம்)
- கவிஞனின் காதல்
- மே தினமே வருக (மே தினத்தைக் குறித்துப் பாடிய முதல் தமிழ்க்கவிஞர்)
- மாதவிக் காவியம்
- கண்ணப்பன் கிளிகள்
- கோசலைக் குமாரி
- வீதியோ வீணையோ
- பாடு பாப்பா (குழந்தை இலக்கியம்)
ஆய்வு & உரைநடை நூல்கள்:
- சிலப்பதிகாரம் காவியமா, நாடகமா?
- திருக்குறளும் கடவுளும்
- தமிழர் சமுதாயம்
- தமிழும் சமஸ்கிருதமும்
3. சிறப்புகள் & இதழ்கள்
- இதழ்கள்: முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சொந்த முயற்சியாக 'சனயுகம்' என்னும் திங்கள் இதழை நடத்தினார். மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய ஏடுகளிலும் எழுதியுள்ளார்.
- திரைப்படம்: இவர் எழுதிய 'சிற்பியின் காதல்' என்னும் நாடகம் பின்னர் 'வணங்காமுடி' என்ற திரைப்படமாக வெளிவந்தது.
- பாடநூல் கவிதை: 8-ஆம் வகுப்புத் தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'பட்டமரம்' என்னும் கவிதை இவர் இயற்றியதே ஆகும்.
பட்டம் மரம் - கூடுதல் விளக்கங்களும் சிறப்புகளும்
- பாடலின் மையக்கருத்து: ஒரு காலத்தில் செழித்து வளர்ந்து, பலருக்கு நிழலும் பயனும் தந்து நின்ற மரம், காலம் செல்லச் செல்ல பட்டுப் போய் (உலர்ந்து போய்) வெறும் கட்டையாக மாறுவதையும், இயற்கையின் சுழற்சியில் அதன் நிலையாமையையும் இப்பாடல் அழகாக விளக்குகிறது.
- மரத்தின் கடந்த காலம் (செழிப்பு நிலை): இலைகள் செழித்து, கிளைகள் பரவி, பறவைகளின் புகலிடமாய் விளங்கி, பலருக்கு நிழல் தந்து நின்ற மரம், காலத்தின் கோலத்தால் தனது பொலிவை இழந்து நிற்கிறது.
- மரத்தின் தற்போதைய நிலை (பட்டுப்போன நிலை): கிளைகள் ஒடிந்து, பட்டை உரிந்து, வெயிலBல் காய்ந்து, பறவைகள் உட்காரக்கூட இடமின்றி வெறிோடி நிற்கும் சோகமான காட்சியை கவிஞர் கண்முன்னே நிறுத்துகிறார்.
- இயற்கையின் தத்துவம்: இளமையும் வளமையும் நிரம்பிய வாழ்க்கை ஒருநாள் முதுமை அடைந்து அழியும் என்பதை இயற்கை மரத்தின் ஊடாக மனித வாழ்விற்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறது.
1. கவிதைப்பேழை: பட்ட மரம் (பாடல்)
மொட்டை கிளையோடு
நின்று தினமும்பெரு
மூச்சு விடும்மரமே !
வெட்டப் படுமொரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ ?
குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை !
வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ ?
கட்டை யெனும்பெயர்
உற்று கொடுந்துயர்
மட்டுக் கருகினையோ !
பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில்
முற்றும் இழந்தனையே !
காலம் எனும்புயல்
சீறி எதிர்க்கக்
கலங்கும் ஒருமனிதன்
ஓலக் குரல்அரற்று
நீட்டிய போல்இடர்
எய்தி உழன்றனையே !
பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு
பாடல் புனைந்ததுவும்
மூடு பனித்திரை
வூடு புவிக்கொரு
மோகம் கொடுத்ததுவும்
ஆடுங் கிளைமிசை
ஏறிச் சிறுவர்
குதிரை விடுத்ததுவும்
ஏடு தருகதை
யாக முடிந்தன !
இன்று வெருங்கனவே !
– தமிழ்ஒளி
2. சொல்லும் பொருளும்
| சொல் | பொருள் | சொல் | பொருள் |
|---|---|---|---|
| விசனம் | கவலை | எழில் | அழகு |
| குந்த | உட்கார | ஓலம் | அலறல் |
| கந்தம் | மணம் | எய்தி | அடைந்து |
| குமைந்தனை | வருந்தினாய் | புவி | உலகம் |
| இற்று | அழிந்து | மிசை | மேல் |
3. பாடலின் பொருள்
- இலைகளற்ற கிளைகளுடன் நின்று, நாள்தோறும் பெருமூச்சு விடும் மரமே! நீ வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி வருந்தினாயோ!
- உட்காருவதற்கு நிழலையும் மணம்பொருந்திய மலர்களையும் தருவதற்காக உனது இலைகள் கூரைபோல் விரிந்திருந்தன. அவை வெந்து கரிய நிறம் பெற்றதை எண்ணி வருந்தினாயோ!
- மரம் என்னும் பெயர் மாறி, கட்டை என்னும் பெயரைப் பெற்று, துன்புற்றுக் கருகினாயே! உனது உடையாகிய பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தாயே!
- காலம் என்னும் புயலால் தாக்கப்பட்டு மனம் கலங்கும் மனிதன் கையை நீட்டி ஓலமிடுவதுபோல துன்புற்று வருந்தினாயே!
- பாடும் பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி உனக்காகப் பாடல் பாடியதும், பனிமூடிய இரவுக்கு நீ அழகு கொடுத்ததும், உனது ஆடும் கிளைகளில் சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியதும் என எல்லாமே ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன. இன்று அவை வெறும் கனவேபோல் தோன்றுகின்றன.
4. தொடை நயம் (எதுகை, மோனை, இயைபு)
| நயம் வகை | பாடலில் இடம்பெற்றுள்ள சொற்கள் |
|---|---|
| எதுகை | குந்த – கந்த ; வெந்து – இற்று |
| மோனை | குந்த – கூரை ; வெந்து – வெம்பிக் |
| இயைபு | அடைந்தனையோ – குமைந்தனையோ |
5. ஆசிரியர் குறிப்பு (நூல் வெளி)
கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் கவிமரபு வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்.
| செய்தி / குறிப்பு | விவரம் |
|---|---|
| ஆசிரியர் பெயர் | தமிழ்ஒளி |
| மரபுத் தொடர்பு | பாரதியாரின் கவிமரபு வழித்தோன்றல்; பாரதிதாசனின் மாணவர் |
| சிறந்த படைப்புகள் | நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மாதவி காவியம் போன்றவை. |
| பாடப்பகுதி நூல் | 'தமிழ்ஒளியின் கவிதைகள்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. |
6. மதிப்பீடு (புத்தகப் பின்புற வினா விடைகள்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- மலர்களிலிருந்து வரும் ________ வண்டுகளை ஈர்க்கும்.
அ) மந்தம் ஆ) அந்தம் இ) சந்தம் ஈ) கந்தம்
விடை: ஈ) கந்தம் - மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது ________ ஆகும்.
அ) சட்டை ஆ) பட்டை இ) மட்டை ஈ) கட்டை
விடை: ஆ) பட்டை - 'வருமென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) வரு + மென்று ஆ) வரும் + மென்று இ) வரும் + என்று ஈ) வரு + என்று
விடை: இ) வரும் + என்று - கிழிந்து + எழில் என்பதனைச் சேர்த்தெழுதுக் கிடைக்கும் சொல் ________
அ) கிழிந்துஎழில் ஆ) கிழிந்தெழில் இ) கிழிந்தொழில் ஈ) கிழிந்தஎழில்
விடை: ஆ) கிழிந்தெழில்
குருவினா:
1. பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?
விடை: மொட்டை கிளையோடு நின்று, நாள்தோறும் பெருமூச்சு விடும் மரமானது தான் வெட்டப்படும் ஒரு நாள் வருமென்று எண்ணிக் கவலை அடைந்தது.
2. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?
விடை: கட்டை என்னும் பெயர் பெற்றுத் துன்புற்றுக் கருகியதாலும், அதன் உடையாகிய பட்டை இற்றுக் கிழிந்ததாலும் பட்டமரம் தனது அழகை முழுதும் இழந்தது.
3. பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
விடை: காலம் என்னும் புயல் சீறி எதிர்க்கும்போது கலங்கும் ஒரு மனிதன் கையை நீட்டி ஓலமிட்டுக் கூச்சலிடுவது பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
சிறுவினா:
1. ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
விடை:
• பாடும் பறவைகள் ஒன்று கூடி மரத்திற்குப் பாடல் புனைந்ததும்,
• மூடுபனித் திரை வழியே உலகிற்கு ஒரு அழகு மயக்கத்தைக் கொடுத்ததும்,
• ஆடும் கிளைகளின் மேல் ஏறிச் சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடியதும் ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தன.
சிந்தனை வினா:
1. மரங்கள் பட்டிடாமல் காக்க, செய்ய வேண்டியவைகளாக நீங்கள் கருதுவன யாவை?
விடை:
• மரங்களுக்குத் தேவையான நீர் மற்றும் உரங்களைத் தவறாமல் வழங்கிப் பராமரிக்க வேண்டும்.
• மரங்களை வெட்டுவதைத் தடுத்து, அதிகளவில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
• மரங்களில் பூச்சித் தாக்குதல்கள் ஏற்படாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
நினைவுகூர்க குறிப்பு: எங்களது www.tnpscninaivukurga.com தளத்தில் TNPSC குரூப் 4, 2, 2A தேர்வுகளுக்கான சமச்சீர் பாடக்குறிப்புகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
Sources & References
- 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று - தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார்
- இசையமுது - பாவேந்தர் பாரதிதாசன்
- மயிலை சீனி வேங்கடசாமி வாழ்க்கை வரலாறு - தமிழ் ஆய்வாளர், நமது மொழியின் அடையாளங்களை மீட்டவர் | 2026
- 42 ஓரெழுத்து ஒருமொழி: TNPSC & TET தேர்வுகளுக்கான முழுமையான விளக்கங்கள் (2026 Updated)
🎯 கவிஞர் தமிழ்ஒளி & பட்டமரம் - TNPSC மாதிரித் தேர்வு
1. 'பட்டமரம்' என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?
2. கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவர் ஆவார்?
3. கவிஞர் தமிழ்ஒளியின் இயற்பெயர் என்ன?
4. தமிழ்ஒளி எழுதிய முதல் காப்பியம் எது?
5. மே தினத்தைக் குறித்துப் பாடிய முதல் தமிழ்க்கவிஞர் யார்?


Hi Please, Do not Spam in Comments