தமிழ் இனவெழுத்துகள் அறிதல் - (ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்) TNPSC எழுத்து இலக்கணம் | Model Questions & Notes PDF

ManiMegala 0

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொதுத்தமிழ் : Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து - இனவெழுத்துகள் அறிதல் பகுதியிலிருந்து கேள்விகள் கட்டாயம் கேட்கப்படும். எழுத்து இலக்கணத்தில் முக்கியமான பகுதி இன எழுத்துக்கள். இன எழுத்துக்கள் பற்றி தெரிந்தால் மட்டுமே எழுத்து இலக்கணத்தில் உள்ள 25 கேள்விகளுக்கும் முழு மார்க் வாங்க முடியும்.

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil old syllabus பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : இன எழுத்துகள் என்ற பகுதி வருகிறது.

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது. நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எழுத்துகளின் பெயர்களில் ஒன்றான இன எழுத்துகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இன எழுத்துகள் பற்றி அறிந்து கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் பெயர்

🎯 TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)

1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது? TNTET/2023
(A) மஞ்சள்
(B) வந்தான்
(C) கண்ணில்
(D) தம்பி
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) கண்ணில்
கண்ணில் என்னும் சொல்லில் மெல்லினத்திற்கான சரியான இன எழுத்து இடம்பெறவில்லை.
  1. வல்லின மெய்யெழுத்துகளுக்கு அவற்றின் இனமான மெல்லின எழுத்துகள் வரியாக வரும் (ங்-க், ஞ்-ச், ண்-ட், ந்-த், ம்-ப், ன்-ற்).
  2. 'ண்' என்ற மெல்லினத்திற்கு இனமான எழுத்து 'ட்' ஆகும். ஆனால் 'கண்ணில்' என்பதில் 'ன்' என்ற எழுத்திற்கு முன் 'ண்' வந்துள்ளது, எனவே இது தவறான இன எழுத்து இணைப்பாகும்.
2. கூற்று: மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
TNPSC Group IV / 2025
(A) கூற்று சரி, காரணம் தவறு
(B) கூற்று தவறு, காரணம் சரி
(C) கூற்று - சரி; காரணம் - சரி
(D) கூற்று - தவறு; காரணம் - தவறு
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) கூற்று - சரி; காரணம் - சரி
மேற்கண்ட கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவையே ஆகும்.
  1. கூற்று: மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
  2. காரணம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும் (எ.கா: அ - ஆ, இ - ஈ).
3. தமிழ் எழுத்துகளில் இன எழுத்து இல்லாத எழுத்து எது? TNTET / 2022
(A) ஆய்த எழுத்து
(B) உயிர் எழுத்து
(C) மெய் எழுத்து
(D) சுட்டு எழுத்து
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) ஆய்த எழுத்து
ஆய்த எழுத்துக்குப் மட்டுமே இன எழுத்து இல்லை.
  1. தமிழ் எழுத்துகளில் வல்லின மெய் எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகளும், உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும் இன எழுத்துகளாக அமைகின்றன.
  2. ஆனால், மூன்று புள்ளிகளைக் கொண்ட ஆய்த எழுத்திற்கு (ஃ) மட்டும் தனியான இன எழுத்துகள் எதுவும் கிடையாது.
4. பொருந்தாத இணையைக் கண்டறிக: CCSEIVGT/2025
(A) ஏ - எ
(B) த - ந
(C) ஐ - அ
(D) ற - ன
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) ஐ - அ
விளக்கம்: தமிழ் எழுத்துக்களில் 'ஐ' என்ற நெடிலுக்குரிய இனவெழுத்து 'இ' ஆகும் (அ அல்ல). எனவே (C) என்பது தவறான (பொருந்தாத) இணையாகும். மற்றவை சரியான இனவெழுத்துச் ஜோடிகளாகும்.

இனவெழுத்துகள் அறிதல்  – தமிழ் இலக்கணம் (Ina Ezhuthukkal)

👭தமிழ் இன எழுத்துகள் (Ina Ezhuthukkal) என்றால் என்ன?

நண்பர்களோடு சேர்ந்திருப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்தானே! உங்களைப்போலத்தான் சில எழுத்துகளும் ஒன்றாகவே இருக்க விரும்புகின்றன. அவற்றை இன எழுத்துகள் என அழைக்கின்றனர். 

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அன்பாகப் பேசுவது, ஒரே மாதிரியாக ஆடை அணிவது என்று சில பண்புகள் பொதுவாக இருப்பதைப் போல, இன எழுத்துகளும் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, கால அளவு, வடிவம் முதலியவற்றில் ஒத்துப்போகின்றன. 

இன எழுத்துகள் யாவை?

  • மெய் எழுத்துக்களில் (ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துக்கள்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் வரும். (அ,ஆ) (இ,ஈ) (உ,ஊ) (எ,ஏ) (ஐ,இ) (ஒ,ஓ) (ஔ,உ )

❌ இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.


எந்த எழுத்து, எந்த எழுத்துக்கு இனமாக வரும்? 

வகைகள்

தமிழ் எழுத்துகளில் இன எழுத்துகள் இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
  • மெய்யெழுத்துகளில் இன எழுத்துகள்
  • உயிரெழுத்துகளில் இன எழுத்துகள்

உயிரெழுத்துகள் - உயிர் இன எழுத்துகள் - உயிரெழுத்துகளில் இன எழுத்துகள்

உயிரெழுத்துகள் பன்னிரண்டு அல்லவா! 

அவற்றை உயிர்க்குறில், உயிர்நெடில் எனப் பிரித்துப் படித்திருப்பீர்கள். ஆகையால், உயிர்க்குறில் எழுத்துகளுக்கு உயிர்நெடில் எழுத்துகள் இனமாக வரும். 

  • உயிர் எழுத்துகளில் (அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ) குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் வரும். (அ,ஆ) (இ,ஈ) (உ,ஊ) (எ,ஏ) (ஐ,இ) (ஒ,ஓ) (ஔ,உ )
    • தழீஇ=தழீ(ழ்+ஈ) =ஈ இ 
    • தூஉம் =தூ(த்+ஊ)உ=ஊ உ (அளபெடையில் மட்டும்)
உயிரெழுத்துக்கள் அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ 12 எழுத்துக்கள்
குறில்(உயிரெழுத்து)
அ, இ, உ, எ, ஒ 5 எழுத்துக்கள்
நெடில்(உயிரெழுத்து) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ 7 எழுத்துக்கள்


உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

  • அ – ஆ
  • இ – ஈ
  • உ – ஊ
  • எ – ஏ
  • ஒ – ஓ

உயிர் இன எழுத்துகள் எடுத்துக்காட்டு

உயிர் எழுத்து உயிர் இன எழுத்துகள் இன எழுத்து எடுத்துக்காட்டு
அ ஆ தொழாஅள், ஆஅதும், தொழாஅர்
இ ஈ தழீஇ, கெழீஇய (அளபெடையில் மட்டும்)
உ ஊ தூஉம் (அளபெடையில் மட்டும்)
எ ஏ சேஎய் (அளபடையில் 'ஏ' க்கு 'எ')
ஐ இ
ஒ ஓ ஓஒதல் (அளபெடையில் மட்டும்)
ஔ உ

👍 ஐ என்ற எழுத்துக்கும் ஒள என்ற எழுத்துக்கும் இன எழுத்து எங்கே!

ஐ - இந்த எழுத்தை நன்றாக ஒலித்துப் பாருங்கள். இறுதியில் என்ன ஓசையில் முடிகிறது? இ தானே. 

அதுபோல, ஒள என்னும் எழுத்தையும் ஒலித்து பாருங்கள். எந்த எழுத்தின் ஓசையில் முடிகிறது? உ என்னும் எழுத்தின் ஓசையல்லவா. 

குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.

ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.

❓இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

உயிர் எழுத்து உயிர் இன எழுத்துகள்
ஐ இ
ஒள  உ
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் இன எழுத்துகள்

✅மெய் எழுத்துக்களின் இன எழுத்துகள் - மெய்யெழுத்துகளில் இன எழுத்துகள்

மெய்யெழுத்துகளை நாம் ஏற்கெனவே பெயரிட்டு அழைத்தோமே நினைவிருக்கிறதா? என்ன அது? வல்லினம், மெல்லினம், இடையினம். 

  • வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகள்தாம் இனமாக வரும். 
மெய்யெழுத்துக்கள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் 18 எழுத்துக்கள்
வல்லினம்
க், ச், ட், த், ப், ற் 6 எழுத்துக்கள்
மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன் 6 எழுத்துக்கள்
இடையினம் ய், ர், ல், வ், ழ், ள் 6 எழுத்துக்கள்

ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும், ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமான வல்லின எழுத்து வரும்.

  • க் – ங் \ திங்கள் (ங் + க)
  • ச் – ஞ் \ மஞ்சள் (ஞ் + ச)
  • ட் – ண் \ மண்டபம் (ண் + ட)
  • த் – ந் \ சந்தனம் (ந் + த)
  • ப் – ம் \ அம்பு (ம் + ப)
  • ற் – ன் \ தென்றல் (ன் + ற)

குறிப்பு: இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகக் கொள்ளப்படும்.

வல்லினம் 

ஆறு வல்லின மெய் (க், ச், ட், த், ப், ற்) எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் (ங, ஞ, ண, ந, ம, ன) இன எழுத்துகள் ஆகும்.

மெல்லினம்

சொற்களில் மெல்லின மெய் எழுத்தை (ங், ஞ், ண், ந், ம், ன்) அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து (க, ச, ட, த, ப, ற) வரும்.

  • திங்கள், 
  •  மஞ்சள், 
  • மண்டபம், 
  • சந்தனம், 
  • அம்பு, 
  • தென்றல்
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் இன எழுத்துகள்

இடையினம்

இடையின எழுத்துக்கள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும். 

சான்று - கல்வி,செல்வம்,பெரியவர்

  • இவற்றிற்கு இன எழுத்துகள் இல்லை. 
  • ஓர் எழுத்திற்கு அருகில் அதே எழுத்து வந்தாலும் அவை இன எழுத்துகள் அல்ல. (பக்கம், அச்சம்...)
  • தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகள் (உடனிலை மெய்ம்மயக்கம்) (பக்கம், அச்சம்...)
அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் இன எழுத்துகள்

மெய்யெழுத்து - இன எழுத்துகள் சான்று

(ங்,க்) (ஞ்,ச்) (ட்,ண்) (த்,ந்) (ம்,ப்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துக்கள்.

இன எழுத்து சொற்கள் 20

  1. திங்கள், 
  2. சிங்கம்,
  3. சங்கு,
  4. மஞ்சள், 
  5. இஞ்சி,
  6. பஞ்சு,
  7. வஞ்சம்
  8. மண்டபம், 
  9. பண்டம்,
  10. சந்தனம், 
  11. பந்தல், 
  12. பந்து, 
  13. பொந்து, 
  14. சந்து
  15.  அம்பு, 
  16. தம்பி, 
  17. தும்பி
  18. தென்றல்
  19. கல்வி,
  20. செல்வம்

சிறப்பு விதி:

  • குறில் எழுத்து இல்லாத 'ஐ' என்னும் நெடில் எழுத்துக்கு 'இ' என்பது இன எழுத்தாகும்.
  • 'ஔ' என்னும் நெடில் எழுத்துக்கு 'உ' என்பது இன எழுத்தாகும்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் அருகில் அருகில் சேர்ந்து வருவது இல்லை. ஆயினும், அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்.
    (எ.கா. ஓஒதல், தூஉம், தழீஇ)

ஆய்த எழுத்து பற்றிய முக்கியக் குறிப்பு:

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு (ஃ) மட்டுமே இன எழுத்து கிடையாது.

இன எழுத்துகள் 30

இன எழுத்துகள் (எகா.)
(ங்,க்) திங்கள், சிங்கம், சங்கு
(ஞ்,ச்) மஞ்சள், பஞ்சு, வஞ்சம், இஞ்சி
(ட்,ண்) மண்டபம், நண்டு, சுண்டல், பண்டம், வண்டு
(த்,ந்) சந்தனம், பந்தல், பந்து, பொந்து, சந்து
(ம்,ப்) அம்பு, தம்பி, தும்பி, பம்பரம்
(ற்,ன்) தென்றல், நன்றி, கன்று, மன்றம் 
ய், ர், ல், வ், ழ், ள் கல்வி,செல்வம்,பெரியவர்,
அ,ஆ

இ,ஈ
தழீஇ (அளபெடையில் மட்டும்)
உ,ஊ
தூஉம் (அளபெடையில் மட்டும்)
எ,ஏ

ஐ,இ

ஒ,ஓ
ஓஒதல் (அளபெடையில் மட்டும்)
ஔ,உ

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - இன எழுத்துகள் மதிப்பீடு

📖 பயிற்சிப் பகுதி - இன எழுத்துகள் மதிப்பீடு

இப்பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக:

🔹 தங்கப் பாப்பா வந்தாளே!
🔹 சிங்கப் பொம்மை தந்தாளே!
🔹 பஞ்சு போன்ற கையாலே!
🔹 பண்டம் கொண்டு வந்தாளே!
🔹 பந்தல் முன்பு நின்றாளே!
🔹 கம்பம் சுற்றி வந்தாளே!
🔹 தென்றல் காற்றும் வந்ததே!
🔹 தெவிட்டா இன்பம் தந்ததே!
✍️ இன எழுத்துச் சொற்கள்: தங்கம், சிங்கம், பஞ்சு, பந்தல், கம்பம், தென்றல், இன்பம்.

🎯 தமிழ் இலக்கணம் - இன எழுத்துகள் பயிற்சிப் பகுதி

1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கண்ணில் (சரியான விடை)
ஈ) தம்பி

2. தவறான சொல்லை வட்டமிடுக (கண்டறிந்து திருத்துதல்):

அ) கண்டான்
ஆ) வென்ரான் (தவறான சொல் - வென்றான் என வர வேண்டும்)
இ) நண்டு
ஈ) வண்டு

3. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக:

  • தெண்றல் ➔ தென்றல்
  • கன்டம் ➔ கண்டம்
  • நண்றி ➔ நன்றி
  • மன்டபம் ➔ மண்டபம்

4. குறுவினா: இன எழுத்துகள் என்றால் என்ன?

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

5. தொடர்களில் இடம்பெற்றுள்ள நட்பெழுத்துச் சொற்களைக் கண்டறிக:

அ. கியூரி அம்மையாரின் குடும்பம் வறுமையுடன் இருந்தது.
ஆ. கியூரி அம்மையார் தம் அறிவியல் கண்டுபிடிப்பை உலகுக்குக் கொடையாக வழங்கினார்.

தொடர்புடையவை

🎯 தமிழ் இன எழுத்துகள் - மாதிரித் தேர்வு

1. தமிழ் எழுத்துகளில் ...... எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

2. ஒள என்னும் எழுத்துக்கு .. என்பது இன எழுத்தாகும்.

3. மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. காரணம் என்ன?

4. 'ங்' என்ற மெல்லின எழுத்துக்கு இனமான வல்லின எழுத்து எது?

5. மெல்லினத்திற்கான இன எழுத்து சரியாக இடம்பெறாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:

6. தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகளைப் பொறுத்தவரை குறில் எழுத்துக்கான இன நெடில் எழுத்துகளில் தவறான இணையைக் கண்டறிக:

7. வல்லின மெய் எழுத்துகளுக்குரிய இனமான மெல்லின எழுத்துகள் சரியாகப் பொருந்திவரும் வரிசையைத் தேர்ந்தெடுக்க:

8. வல்லின எழுத்துகளுக்கு இனமாக அமையும் எழுத்துகள் எவை?

9. சொற்களில் மெல்லின மெய்யெழுத்திற்கு முன் அதற்கேற்ற இனமான வல்லின மெய்யெழுத்து வராத சொல்லைக் கண்டறிக:

10. தமிழ் எழுத்துகளில் இடையின எழுத்துகளுக்கு இன எழுத்துகள் உண்டா?

🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) - இன எழுத்துகள்

Q1. இன எழுத்துகள் என்றால் என்ன?

தமிழில் எழுத்துகளுக்கு இடையே ஒலியின் பிறப்பு, முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஒற்றுமை இருக்கும். இத்தகைய ஒற்றுமை கொண்ட எழுத்துகள் ஒன்றுக்கு மற்றொன்று இன எழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.

Q2. தமிழ் எழுத்துகளில் இன எழுத்து இல்லாத எழுத்து எது?

தமிழ் எழுத்துகளில் மூன்று புள்ளிகளைக் கொண்ட **ஆய்த எழுத்திற்கு (ஃ)** மட்டுமே தனியான இன எழுத்துகள் எதுவும் கிடையாது.

Q3. வல்லின எழுத்துகளுக்குரிய இன எழுத்துகள் எவை?

வல்லின மெய் எழுத்துகளான (க், ச், ட், த், ப், ற்) ஆறு எழுத்துகளுக்கு, மெல்லின மெய் எழுத்துகள் (ங், ஞ், ண், ந், ம், ன்) இன எழுத்துகளாக அமைகின்றன.

Q4. உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் எவ்வாறு அமைகின்றன?

உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகளுக்கு நெடில் எழுத்துகளும், நெடில் எழுத்துகளுக்குக் குறில் எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும் (எ.கா: அ-ஆ, இ-ஈ, உ-ஊ).

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.