TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பொதுத்தமிழ் பகுதிதான் அரசுப் பணி கனவை நனவாக்கும் திருப்புமுனையாக அமைகிறது. அதில் குறிப்பாக பொதுத்தமிழ் : Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து பகுதியிலிருந்து 25 கேள்விகள் கட்டாயம் கேட்கப்படும்.
TNPSC syllabus பொதுத்தமிழ் பகுதியில் உள்ள எழுத்து இலக்கணம் பகுதிகள்,
- பிரித்து எழுதுதல் | விளக்கம்
- சேர்த்து எழுதுதல்
- சந்திப்பிழை
- குறில், நெடில் வேறுபாடு
- லகர, ளகர, ழகர வேறுபாடு
- நகர, னகர, ணகர வேறுபாடு
- ரகர, றகர வேறுபாடு
- வினா எழுத்துகள்
- இனவெழுத்துகள் அறிதல் | விளக்கம்
- சுட்டு எழுத்துகள்
- ஒருமைப் பன்மை அறிதல்
இந்த எழுத்திலக்கணம் பகுதியில் முழுமையான மதிப்பெண் பெற எழுத்து இலக்கணம் என்றால் என்ன, எழுத்து இலக்கணம் பற்றிய இலக்கண நூல்கள், எழுத்து இலக்கணத்தின் பிரிவுகள், நன்னூல் மற்றும் தொல்காப்பியத்தில் கூறப்படும் எழுத்திலக்கணம் பிரிவுகள் மற்றும் TNPSC எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இந்த வலைப்பதிவில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறிய கடந்த முந்தைய வினாத்தாள்களில் (PYQs) கேட்கப்பட்ட வினாக்களின் பகுப்பாய்வு, நன்னூல் மற்றும் தொல்காப்பியத்தில் உள்ள எழுத்து இலக்கண பிரிவுகள் மற்றும் அவற்றில் என்னென்ன அடங்கியுள்ளது, Free PDF download மற்றும் உங்கள் திறமையை உடனே சோதித்துப் பார்க்கக்கூடிய இணைய வழி மாதிரித் தேர்வு (Interactive Quiz) ஆகிய அனைத்தும் ஒரே தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம்📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
📕TNPSC previous year questions and answers
காரணம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடியிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
(A) கூற்று - சரி; காரணம் - தவறு
(B) கூற்று - தவறு; காரணம் - சரி
(C) கூற்று - சரி; காரணம் - சரி
(D) கூற்று - தவறு; காரணம் - தவறு
(E) விடை தெரியவில்லை
காரணம்: எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டுஎழுத்துகளாக வந்து பிறவற்றைக் சுட்டுகிறது.
(A) கூற்று - சரி; காரணம் - தவறு
(B) கூற்று - தவறு; காரணம் - சரி
(C) கூற்று - சரி; காரணம் - சரி
(D) கூற்று - தவறு; காரணம் - தவறு
(E) விடை தெரியவில்லை
(B) அங்கு கேட்டேன்
(C) இங்கு பேசாதே
(D) எங்கு சென்றாய்
(E) விடை தெரியவில்லை
(B) த - ந
(C) ஐ - அ
(D) ற - ன
(E) விடை தெரியவில்லை
(A) பாதி, பறை
(B) மேளம், ஒலித்தல்
(C) மழை, வேறு
(D) விடு, ஒலித்தல்
(E) விடை தெரியவில்லை
(A) ஏவல்வினா
(B) ஐயவினா
(C) கொளல்வினா
(D) கொடைவினா
(E) விடை தெரியவில்லை
(A) போர், மிகுதி
(B) கலித்தல், கழித்தல்
(C) மகிழ்ச்சி, களித்தல்
(D) கலித்தொகை, மாவு களி
(E) விடை தெரியவில்லை
(B) மரம் முறிந்து விழுந்தன.
(C) சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
(D) சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
(E) விடை தெரியவில்லை
(A) கூட்டம், பொன்
(B) பொன், கூட்டம்
(C) கூட்டம், காடு
(D) காடு, தோட்டம்
(E) விடை தெரியவில்லை
(A) கருப்பம், சுற்று, சபதம்
(B) சபதம், சுவர், தானியம்
(C) ஆலோசனை, ஆணை, வாயில்
(D) ஆணை, முற்றுகையிடூ, சருமம்
(E) விடை தெரியவில்லை
தமிழ் இலக்கணம்
தமிழ் மொழி சிதைந்துவிடாமல் அதைக் காப்பதற்காகவும், எழுத்துகளின் சரியான வடிவத்தையும் ஒலியையும் அறிந்துகொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட விதிகளின் தொகுப்பே தமிழ் இலக்கணம் ஆகும். இதனை 1.எழுத்து 2.சொல் 3.பொருள் 4. யாப்பு 5. அணி ஆகிய ஐந்து பிரிவுகளே நன்குணர்த்தும்.
இதில் முதல் இரண்டு இலக்கணங்களான எழுத்து மற்றும் சொல் இலக்கணத்தை தொல்காப்பியம் மற்றும் நன்னூல் ஆகிய நூல்கள் விரிவாக விளக்குகின்றன.
எழுத்து இலக்கணம் என்றால் என்ன ? (Tamil Ezhuthu Ilakkanam)
எழுத்துக்களின் பிறப்பு, வகை, தொகை, அவை சொற்களில் இடம் பெறும் முறை முதலானவற்றைக் விளக்கங்களையும் கூறுவது எழுத்து இலக்கணம்.
எழுத்துகள் தோன்றக் காரணம்
ஒலி வேறுபாடுகளே வெவ்வேறு எழுத்துகள் தோன்றக் காரணம். மொழிக்கு ஒலி, வரி ஆகிய இரு வடிவங்கள் உள்ளன.
- ஒலி வடிவம் என்பது பேச்சு மொழியாகும்.
- வரி வடிவம் அல்லது உருவம் என்பது எழுத்து மொழியாகும்.
எழுத்து இலக்கணம் பற்றி கூறும் தமிழ் இலக்கண நூல்கள்
தொல்காப்பிய எழுத்து, சொல் ஆகிய அதிகாரங்களை அடிப்படையாகக்கொண்டு நன்னூல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.
| இலக்கண நூல் (Book Name) | ஆசிரியர் (Author) | ஐந்திலக்கணப் பிரிவு (Grammar Section Covered) |
|---|---|---|
| அகத்தியம் | அகத்தியர் | ஐந்திலக்கணம் (First Grammar Book - Not fully extant) |
| தொல்காப்பியம் | தொல்காப்பியர் | ஐந்திலக்கணம் (எழுத்து, சொல், பொருள்) |
| யாப்பருங்கலம் | அமிதசாகரர் | யாப்பிலக்கணம் |
| வீரசோழியம் | புத்தமித்திரர் | ஐந்திலக்கணம் (Examines Tamil & Sanskrit grammar norms) |
| நன்னூல் | பவணந்தி முனிவர் | எழுத்து & சொல் இலக்கணம் (Most widely used standard) |
| நேமி நாதம் | குணவீர பண்டிதர் | எழுத்து & சொல் இலக்கணம் ("சின்னூல்") |
| தண்டியலங்காரம் | தண்டி | அணியிலக்கணம் (First distinct book on rhetoric/figures of speech) |
| இலக்கண விளக்கம் | வைத்திய நாத தேசிகர் | ஐந்திலக்கணம் ("குட்டித் தொல்காப்பியம்") |
| இலக்கண கொத்து | சுவாமிநாத தேசிகர் | சொல்லதிகாரம் மட்டும் |
| புறப்பொருள் வெண்பாமாலை | ஐயனாரிதனார் | புறப்பொருள் (பொருள் இலக்கணம் - 12 திணைகள்) |
| மாறனலங்காரம் | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | அணியிலக்கணம் |
எழுத்திலக்கணப் பிரிவுகள்
- தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது.
- நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது.
- இவ்வாறு தொல்காப்பிய எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுபவற்றை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் எனும் மூன்று பிரிவுகளுள் அடக்கலாம் என்று சி. வை. சண்முகம் கூறுகின்றார்.
| எழுத்திலக்கணப் பிரிவுகள் | ||
|---|---|---|
| பிரிவு | தொல்காப்பியம் | நன்னூல் |
| எழுத்தியல் |
1. நூல்மரபு, 2. மொழிமரபு |
1. எழுத்தியல் |
| பிறப்பியல் | 3. பிறப்பியல் | |
| பதவியல் | -- | 2. பதவியல் |
| புணரியல் |
4. புணரியல், 5. தொகைமரபு, 6. உருபியல், 7. உயிர்மயங்கியல், 8. புள்ளிமயங்கியல், 9. குற்றியலுகரப் புணரியல் |
3. உயிரீற்றுப் புணரியல், 4. மெய்யீற்றுப் புணரியல், 5. உருபு புணரியல் |
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படி, எழுத்திலக்கணத்தின் வகைகள்
தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது.
குறிப்பு (Note): எழுத்ததிகாரத்தில் மொத்தம் 483 நூற்பாக்கள் உள்ளன, மேலும் வெவ்வேறு உரையாசிரியர்களின் (எ.கா. இளம்பூரணர், நச்சினார்க்கினியர்) பதிப்புகளில் நூற்பா எண்களில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம். TNPSC / மாணவர் குறிப்புகளுக்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியான நூற்பா எண் வரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
| தொல்காப்பியம் | |
|---|---|
| வ.எண். தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் | விளக்கம் |
| 1. நூல் மரபு |
|
| 2. மொழி மரபு |
|
| 3. பிறப்பியல் |
இயல்புப் புணர்ச்சி மற்றும் விகாரப் புணர்ச்சி — தோன்றல், திரிதல், கெடுதல் (நூற்பா 116 - 130) உயிர், மெய் எழுத்துகள் முன் வருமொழி இணையும் அடிப்படைகள் (நூற்பா 131 - 142) உடம்படுமெய் (ய், வ்) தோன்றும் இடங்களும் விதிகளும் (நூற்பா 143 - 151) |
| 4. புணரியல் | |
| 5. தொகைமரபு | தொகைச் சொற்கள் புணரும்போது ஏற்படும் பொது மாற்றங்கள் (நூற்பா 152 - 163) வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்களுக்கான அடிப்படைக் கோட்பாடுகள் (நூற்பா 164 - 175) அல்வழிப் புணர்ச்சி மற்றும் வேற்றுமைப் புணர்ச்சியின் வேறுபாடுகள் (நூற்பா 176 - 186) |
| 6. உருபியல் | வேற்றுமை உருபுகள் பெயர்ச்சொற்களோடு இணையும் முறை (நூற்பா 187 - 194) சாரியைகள் (அன், இன், அத்து, ஒடு, க்கு முதலியன) வரும் இடங்கள் (நூற்பா 195 - 201) சுட்டு, வினா மற்றும் எண்ணுப் பெயர்களில் உருபு புணரும் விதிகள் (நூற்பா 202 - 208) |
| 7. உயிர்மயங்கியல் | நிலைமொழி உயிரெழுத்தில் முடியும் சொற்களின் பொதுப் புணர்ச்சி (நூற்பா 209 - 225) குறில் உயிர் ஈறுகள் (அ, இ, உ, எ, ஒ) புணரும் விதிகள் (நூற்பா 226 - 258) நெடில் உயிர் ஈறுகள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) புணரும் விதிகள் (நூற்பா 259 - 296) |
| 8.புள்ளி மயங்கியல் | நிலைமொழி மெய்யெழுத்தில் முடியும் சொற்களின் பொது விதிகள் (நூற்பா 297 - 318) மெல்லின மெய் ஈறுகள் (ண், ன், ம் முதலியன) புணரும் முறைகள் (நூற்பா 319 - 362) இடையின மெய் ஈறுகள் (ய், ர், ல், வ், ழ், ள்) புணரும் விதிகள் (நூற்பா 363 - 405) |
| 9.குற்றியலுகரப்புணரியல் | ஆறு வகைக் குற்றியலுகரச் சொற்கள் புணரும் விதிகள் (நூற்பா 406 - 432) உயிர் மற்றும் மெய் முதல் வருமொழிகளுடன் குற்றியலுகரம் புணரும் முறை (நூற்பா 433 - 462) சிறப்புக் குற்றியலுகரச் சொற்கள் மற்றும் முடிவுரை (நூற்பா 463 - 483) |
நன்னூல் எழுத்ததிகாரம் படி, எழுத்திலக்கணத்தின் வகைகள்
நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை
5 இயல்களில் விளக்குகிறது.
முதல்ஈறு இடைநிலை போலி என்றா
பதம்புணர்வுப் பெனப்பன் விருபாற்று அதுவே"
5 வகை நன்னூல் இயல்கள்
நன்னூல் எழுத்ததிகாரம் இயல்கள் விளக்கம் இயல் 1 - எழுத்தியல் - எழுத்தியலில் குறிப்பிடப்படும் - முதல் 10 கூறுகள்
- எண் (முதல் எழுத்து, சார்பெழுத்து)
- பெயர் (சுட்டு, வினா, இடுகுறி, காரணம், இன எழுத்துகள், மயங்கொலிகள்)
- முறை (எழுத்துகளின் வரிசை)
- பிறப்பு (இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு)
- உருவம் அல்லது வரி வடிவம்
- மாத்திரை (ஒலிக்கும் கால அளவு)
- முதல் (மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள்)
- ஈறு அல்லது இறுதி (மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்)
- இடைநிலை (இடையில் வரும் எழுத்துகள்)
- போலி (முன்னர் நின்ற எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்து வந்து அதே பொருள் தருவது)
இயல் 2. பதவியல் - 11-வது கூறான பதம்
- பதம் (பகுபதம், பகாப்பதம்) பதவியலில் குறிப்பிடப்படும் ஐந்து கூறுகள்
நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாவதாக அமைவது பதவியல் ஆகும். இதில் பதம், பகுதி, விகுதி, இடைநிலை, வடமொழியாக்கம் என்ற ஐந்து கூறுகளின் கீழ் மொத்தம் 23 நூற்பாக்கள் தரப்பட்டுள்ளன.
- பதம் - 6 நூற்பாக்கள்
- பகுதி - 6 நூற்பாக்கள்
- விகுதி - 1 நூற்பா
- இடைநிலை - 5 நூற்பாக்கள்
- வடமொழியாக்கம் - 5 நூற்பாக்கள்
இயல் 3. உயிரீற்றுப் புணரியல் 12-வது கூறு புணர்ச்சி விதிகளில் உயிரீற்றுச் சொற்களை விளக்குகிறது. இயல் 4. மெய்யீற்றுப் புணரியல் - 12-வது கூறு புணர்ச்சி விதிகளில் மெய்யீற்றுச் சொற்களை விளக்குகிறது. இயல் 5. உருபு புணரியல் 12-வது கூறு வேற்றுமை உருபுகள் புணரும் முறைகளையும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் விளக்குகிறது.
எனப் பன்னிரண்டு பிரிவுகளை தமிழ் எழுத்து இலக்கணம் கொண்டுள்ளது என நன்னூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும். அவை
1. எழுத்தின் அகத்திலக்கணம்
எண் முதல் போலி வரை உள்ள பத்துப் பிரிவுகளும் எழுத்தின் அகத்திலக்கணம் எனப்படும்.
2. எழுத்தின் புறத்திலக்கணம்
பதம், புணர்ப்பு ஆகிய இரண்டும் எழுத்தின் புறத்திலக்கணம் எனப்படும்.
கரம், கான், காரம், கேனம்
தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
- குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
- நெடில் எழுத்துக்களைக் குறிக்க 'கான்' (எ.கா.) ஐகான், ஔகான்
- குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம்
- ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா) அஃகேனம்
நினைவுகூர்க
மொழியில் அணுவே ஒலியாகவும், ஒலியே எழுத்தாகவும் ஆவதால் அணு, ஒலி இரண்டும் முதற் காரணங்கள் ஆகும்.தமிழின் சிறப்பையும் காலந்தோறும் பெற்றுவரும் வளர்ச்சியையும் அறிந்து பயன்படுத்திக் கொள்ளத் இலக்கண அறிவு பெரிதும் துணை செய்யும். எனவே தமிழ்இலக்கணத்தை ஆழ்ந்து கற்க வேண்டியது தமிழ் படிக்கும் மாணவரின் முதற்கடமை என்பதை நினைவுகூர்க.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் ஈற்றில் ஏகாரம் அமைத்து எழுதுக
அ. நண்பர்கள் - நண்பர்களே
ஆ. பெரியோர் - பெரியோரே
இ. சன்றோர் - சான்றோரே
தொடர்புடையவை
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம் வகைகள் எழுதுக?
- பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
-
யாப்பின் உறுப்புகள் யாவை?
- அணியிலக்கணம் பற்றி கூறும் தமிழ் நூல்கள் யாவை ?
🎯 தமிழ் இலக்கண வகைகள், தொல்காப்பியம் & நன்னூல் - மாதிரித் தேர்வு
1. தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை எத்தனை?
2. நன்னூல் எழுத்ததிகாரம் எத்தனை இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
3. நன்னூல் நூற்பா "எண்பெயர் முறைபிறப்பு...." குறிப்பிடும் எழுத்து இலக்கணக் கூறுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
4. நன்னூலின் இரண்டாவது இயலான 'பதவியல்' எதை விளக்குகிறது?
5. எழுத்துகள் பிறக்கும் இடங்களையும் அதன் முயற்சியையும் கூறும் தொல்காப்பிய இயல் எது?
6. நன்னூலின் 12-வது கூறான 'புணர்ச்சி' எத்தனை இயல்களாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது?
7. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இயல் எது?
8. வேற்றுமை உருபுகள் புணரும் முறைகளை விளக்கும் தொல்காப்பிய இயல் எது?
9. நன்னூல் அகத்திலக்கணமான முதல் 10 கூறுகளை எங்கு விளக்குகிறது?
10. தொல்காப்பியத்தில் குற்றியலுகரச் சொற்கள் புணரும் முறையைக் கூறும் இயல் எது?
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
பொதுவான கேள்விகள் (FAQs)
பதில்: 150 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் (40%) எடுக்க வேண்டும்.
பதில்: இது பத்தாம் வகுப்பு (SSLC Standard) தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
பதில்: ஆம், குரூப்-4 போன்ற தேர்வுகளில் இது தரவரிசைப் பட்டியலுக்கு (Ranking) எடுத்துக்கொள்ளப்படும்.
பதில்: தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. இதில் முதல் அதிகாரமான எழுத்ததிகாரம் 9 இயல்களைக் கொண்டுள்ளது.
பதில்: நன்னூல் எழுத்ததிகாரம் தமிழ் எழுத்து இலக்கணத்தை 12 கூறுகளாகப் பிரித்து மொத்தம் 5 இயல்களில் விளக்குகிறது.




Hi Please, Do not Spam in Comments