TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET பாடத்திட்டத்தில் இடம்பெறும் பொதுத்தமிழ் : Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து பகுதியில் 25 கேள்விகள் கட்டாயம் இடம்பெறும். எனவே நான் பல ஆண்டுகளாகத் TNPSC தேர்வுகளுக்காகத் தயாரித்த குறிப்புகளின் அடிப்படையில் இதைத் தொகுத்துள்ளேன். TNPSC exam எழுதுறவங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாகத் TNPSC exam எழுதிய அனுபவத்தில், மாணவர்கள் அதிகம் குழம்பும் பகுதிகளை மையமாகக் கொண்டு இக்குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
TNPSC குரூப் தேர்வுகளில் தமிழ் இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண் பெற, வெறும் நூற்பாக்களை மனப்பாடம் செய்வது மட்டும் போதாது. "எவ்வாறு" எழுத்துகள் பிறக்கின்றன, "எதனால்" அவை ஒலிக்கப்படுகின்றன, மற்றும் "எதற்கு" இவ்விலக்கண விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன (Why, How & What for) என்ற ஆழமான புரிதல் அவசியமாகும். சமச்சீர் கல்வி மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் (PYQ) பகுப்பாய்வு அடிப்படையில், தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் முதல் இயலான 'நூல் மரபு' தரும் 33 நூற்பாக்களின் உட்பொருளைத் துல்லியமாக அறிந்துகொள்வது தேர்வில் கடினமான கேள்விகளையும் எளிதாகக் கையாள வழிவகுக்கும்.
அதுமட்டுமல்லாமல், உங்களது வெற்றியை உறுதி செய்ய முந்தைய ஆண்டு வினாக்களின் விரிவான பகுப்பாய்வு (Detailed PYQ Analysis), இலவசப் பாடக் குறிப்பு (Free PDF Download) மற்றும் உங்களில் யாருக்கு 10-க்கு 10 மதிப்பெண்கள் கிடைக்கப்போகிறது என்பதைச் சோதித்துப் பார்க்க 10 மதிப்பெண்களுக்கான நேரடி ஆன்லைன் தேர்வு (10 Marks Live Quiz) ஆகிய அனைத்தும் இதனுள் காத்துக் கொண்டிருக்கின்றன! பொதுத்தமிழ் இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெற்று, 10-க்கு 10 எடுக்கத் தயாராக உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்!
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
📕TNPSC previous year questions and answers
காரணம் : அ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைக் சுட்டுகிறது. CCSEIVGT/2025
(B) கூற்று - தவறு; காரணம் - சரி
(C) கூற்று - சரி; காரணம் - சரி
(D) கூற்று - தவறு; காரணம் - தவறு
(E) விடை தெரியவில்லை
காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது. CCSEIVGT/2025
(B) கூற்று - தவறு; காரணம் - சரி
(C) கூற்று - சரி; காரணம் - சரி
(D) கூற்று, காரணம் இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம். CCSEIVGT/2025
(B) கூற்று - தவறு, காரணம் - சரி
(C) கூற்று - தவறு, காரணம் - தவறு
(D) கூற்று - சரி, காரணம் - சரி
(E) விடை தெரியவில்லை
காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடியும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்து ஆகும். CCSEIVGT/2025
(B) கூற்று - தவறு; காரணம் - சரி
(C) கூற்று - சரி; காரணம் - சரி
(D) கூற்று - தவறு; காரணம் - தவறு
(E) விடை தெரியவில்லை
- (a) இயல்
- (b) புதிது
- (c) ஆணி
- (d) வரம்
- 1. உயிர் முதல் உயிர்ஈறு
- 2. உயிர் முதல் மெய்யீறு
- 3. மெய்முதல் மெய்யீறு
- 4. மெய்முதல் உயிரீறு
| (a) | (b) | (c) | (d) | |
|---|---|---|---|---|
| (A) | 2 | 4 | 1 | 3 |
| (B) | 3 | 2 | 1 | 4 |
| (C) | 1 | 3 | 4 | 2 |
| (D) | 1 | 4 | 2 | 3 |
(B) ஐயவினா
(C) கொளல்வினா
(D) கொடைவினா
(E) விடை தெரியவில்லை
தமிழ் இலக்கணம்
சிலர் இலக்கணத்தை மூன்று வகைகளாகவும், இரு வகைகளும் பிரித்துள்ளனர்.
பலர் இலக்கணம் குறித்த நூல்களை எழுதியுள்ளனர். அதில் முக்கியமான சில இலக்கண நூல்கள் தொல்காப்பியம், அகத்தியம், நன்னூல் ஆகும்.
தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்ததிகாரம்
ஐவகை அடிப்படைத் தமிழ் இலக்கணத்தில் ஒன்றான எழுத்து அதிகாரம் பற்றி விரிவாக தெரிந்தால் மட்டுமே இதில் முழு மதிப்பெண் வாங்க முடியும்.
தொல்காப்பியர் இலக்கணத்தை ஐந்து வகைகளாக பிரித்து இருந்தார். அதில் எழுத்து மட்டும் சொல் இலக்கணம் குறித்து விரிவாக விளக்கியிருந்தார். அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது.
- நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது.
📚 தொல்காப்பியம் – எழுத்துதிகாரம்: நூல் மரபு - Tholkappiyam Nool Marabu Noorpaas with Explanation
நூல் மரபு விளக்கும் முக்கியப் பகுதிகள் - Tholkappiyam Nool Marabu 33 Noorpaas
- எழுத்துகளின் தொகை (நூற்பா 1 - 2) - Total count of Tamil letters)
- உயிரெழுத்துகள் மற்றும் மாத்திரை அளவுகள் (நூற்பா 3 - 9)
- மெய்யெழுத்துகளின் மாத்திரை மற்றும் வடிவம் (நூற்பா 10 - 18)
- மெய்யெழுத்துகளின் இனங்களும் மயக்க முறைகளும் (நூற்பா 19 - 30)
- சுட்டு, வினா எழுத்துகள் மற்றும் முடிவுரை (நூற்பா 31 - 33)
தமிழியலின் வேர்களை அறியவும், நமது மொழி மரபைப் புரிந்துகொள்ளவும் இப்பகுதி மிகவும் அடிப்படையானது.
தொல்காப்பியம் நூல் மரபு - முக்கிய வினாக்களும் நேரடிப் பதில்களும்
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் முதல் இயலான 'நூல் மரபு' பற்றிய சுருக்கமான தகவல்கள் TNPSC தேர்வர்களுக்காக கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:
| வினா / தலைப்பு | நேரடிப் பதில் / விளக்கம் |
|---|---|
| நூல் மரபில் உள்ள மொத்த நூற்பாக்கள் | 33 நூற்பாக்கள் |
| தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் | 3 அதிகாரங்கள் (எழுத்து, சொல், பொருள்) |
| தமிழ் முதல் எழுத்துகளின் எண்ணிக்கை | 30 எழுத்துகள் (உயிர் 12 + மெய் 18) |
| சார்பெழுத்துகளின் வகைகள் | 3 வகைகள் (குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்) |
1. எழுத்துகளின் தொகை (நூற்பா 1 - 2)
தமிழ் எழுத்துகளின் அடிப்படை எண்ணிக்கையை மிகத் தெளிவாக வரையறுக்கிறது. தமிழ் மொழியில் முதலெழுத்துகள் எனப்படும் உயிரும் மெய்யும் சேர்ந்து முப்பது எழுத்துகள் முதன்மையானவை என்று இ்ப்பகுதி விளக்குகிறது. மேலும், இந்த முப்பது எழுத்துகளுக்குள் அடங்காமல், தனித்து இயங்காமல் பிற எழுத்துகளைச் சார்ந்து இயங்கும் குற்றியலிகரம், குற்றியலுகரம் மற்றும் ஆய்தம் ஆகிய மூன்று சார்பெழுத்துகளின் தன்மையையும் இந்நூற்பாக்கள் எடுத்துரைக்கின்றன.
எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய்,
முப்பஃது என்ப, சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே
விளக்கம் (நூற்பா 1): தமிழ் எழுத்துகள் 'அ' முதல் 'ன்' வரை உள்ள 30 எழுத்துகள் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து வரும் 3 சார்பெழுத்துகளும் இம்முப்பதில் அடங்கா.
- முதன்மை எழுத்துகள்: அ, ஆ, இ--12... க், ங், ச்---18 (உயிர் 12 + மெய் 18 = 30)
அவைதாம்,
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற,
முப்பாற்புள்ளியும், எழுத்து ஓரன்ன
விளக்கம் (நூற்பா 2): குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் புள்ளி பெற்று வரும் சார்பெழுத்துகள் ஆகும்.
- சார்பெழுத்துகள்: அஃது (ஆய்தம்), குற்றியலுகரம் (எ.கா: நாகு,வீடு), குற்றியலிகரம் (கொக்கு (க்+உ) + யாது = கொக்கியாது (க்+ இ)).
2. உயிரெழுத்துகள் மற்றும் மாத்திரை அளவுகள் (நூற்பா 3 - 9)
தமிழ் எழுத்துகளில் உயிரெழுத்துகளின் வகைகளையும், அவற்றை ஒலிக்க ஆகும் கால அளவாகிய மாத்திரைகளையும் இப்பகுதி விரிவாகப் பேசுகிறது. குறில் எழுத்துகள் ஐந்துக்கும் ஒரு மாத்திரை அளவும், நெடில் எழுத்துகள் ஏழுக்கும் இரண்டு மாத்திரை அளவும் உரியவை என்பதைத் தொல்காப்பியர் விளக்குகிறார். இயல்பாக மூன்று மாத்திரை அளவு தனித்து ஒலிக்கக்கூடிய எழுத்துகள் தமிழில் இல்லை என்பதையும், தேவைப்படும்போது நெடிலுடன் குறில் சேர்ந்து அளபெடுக்கும் முறையையும் கண் இமைக்கும் நேரத்தை அளவாகக் கொண்டு இந்நூற்பாக்கள் விளக்குகின்றன.
அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால்
ஐந்தும் ஓர் அளபு இசைக்கும், குற்றெழுத்து என்ப
விளக்கம் (நூற்பா 3): அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் குற்றெழுத்துகள் (குறில்) ஆகும்.
- குற்றெழுத்து (1 மாத்திரை): அ, இ, உ, எ, ஒ (எ.கா: பல, மதி).
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் அப்பால்
ஏழும் ஈர் அளபு இசைக்கும், நெட்டெழுத்து என்ப
விளக்கம் (நூற்பா 4): ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் நெட்டெழுத்துகள் (நெடில்) ஆகும்.
- நெட்டெழுத்து (2 மாத்திரை): ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ (எ.கா: கா, தீ, பூ).
மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே
விளக்கம் (நூற்பா 5): இயல்பாகவே மூன்று மாத்திரை அளவு ஒலிக்கும் தனி எழுத்து தமிழில் இல்லை.
- உயிரளபெடை (3 மாத்திரை): தழீஇய, உறஉள, கெடுப்பதூஉம்.
நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்
விளக்கம் (நூற்பா 6): மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டுமானால், நெட்டெழுத்துடன் அதற்கு இனமான குற்றெழுத்தைச் சேர்த்து (அளபெடை) ஒலிக்க வேண்டும்.
கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே
விளக்கம் (நூற்பா 7): இயல்பாகக் கண் இமைக்கும் நேரமும், கை நொடிக்கும் நேரமும் ஒரு மாத்திரை அளவாகும்.
- மாத்திரை அளவு: கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடிக்கும் நேரம் 1 மாத்திரை
ஒளகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப
விளக்கம் (நூற்பா 8): 'அ' முதல் 'ஔ' வரை உள்ள 12 எழுத்துகளும் உயிரெழுத்துகள் எனப்படும்.
- உயிரெழுத்துகள்: அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துகள்.
னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப
விளக்கம் (நூற்பா 9): 'க்' முதல் 'ன்' வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் எனப்படும்.
- மெய்யெழுத்துகள்: க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகள்.
3. மெய்யெழுத்துகளின் மாத்திரை மற்றும் வடிவம் (நூற்பா 10 - 18)
மெய்யெழுத்துகளின் ஒலியளவு அரை மாத்திரை என்பதை உணர்த்துவதோடு, அவை உயிரெழுத்துகளுடன் இணைந்து உயிர்மெய்யாக மாறும் இயல்பையும் இப்பகுதி விளக்குகிறது. மெய்யெழுத்துகள் அனைத்தும் தங்களின் மேலே புள்ளி பெற்றே நிற்கும் என்ற இலக்கண விதியையும், பிற்காலக் கால மாற்றங்களுக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் மற்றும் புள்ளியிடும் முறைகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் இந்நூற்பாக்கள் நுணுக்கமாகப் பேசுகின்றன.
மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா
விளக்கம் (நூற்பா 10): மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய்யாக ஒலித்தாலும், உயிரெழுத்துகள் தமது இயல்பான மாத்திரை அளவிலிருந்து மாறுபடாது.
மெய்யின் அளபே அரை என மொழிப
விளக்கம் (நூற்பா 11): மெய்யெழுத்துகளின் ஒலிக்கும் அளவு அரை மாத்திரை ஆகும்.
- மெய்யெழுத்து மாத்திரை: அரை மாத்திரை (க், ச், ட்...).
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே
விளக்கம் (நூற்பா 12): குற்றியலிகரம், குற்றியலுகரம் மற்றும் ஆய்தம் ஆகிய மூன்று சார்பெழுத்துகளும் மெய்யெழுத்தைப் போல அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும், தெரியும் காலை
விளக்கம் (நூற்பா 13): மகர மெய்யெழுத்து சில இடங்களில் தனது அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும் (மகரக்குறுக்கம்).
- போலும் - போல்ம் - போன்ம், --- என்பதில் 'ம்' தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பது.
உட்பெறு புள்ளி உருவாகுமே
விளக்கம் (நூற்பா 14): குறுகி ஒலிக்கும் மகர மெய், தன் உள்ளே ஒரு புள்ளியைப் பெற்று வடிவம் பெறும்.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
விளக்கம் (நூற்பா 15): மெய்யெழுத்துகள் அனைத்தும் தலைமேல் புள்ளி பெற்று நிற்பதே அவற்றின் இயல்பாகும்.
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே
விளக்கம் (நூற்பா 16): அக்காலத்தில் 'எ', 'ஒ' ஆகிய குறில் எழுத்துகளும் மெய்யெழுத்துகளைப் போலவே புள்ளி பெற்று எழுதப்பட்டன.
- எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.
- எ்து என எழுதப்பட்டால் எது என்றும்,
- எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.
தமிழ் வரிவடிவ வளர்ச்சி மற்றும் எழுத்துக்களில் சீர்திருத்தம் - 8 ஆம் வகுப்பு இயல் ஒன்று
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவு உருவாகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆ ஈர் இயல உயிர்த்தல் ஆறே
விளக்கம் (நூற்பா 17): புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள், 'அ'கரத்துடன் சேர்ந்து அதே வடிவிலும், பிற உயிர்களுடன் சேர்ந்து வடிவம் மாறியும் உயிர்மெய்யாக ஒலிக்கும்.
மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே
விளக்கம் (நூற்பா 18): உயிர்மெய் எழுத்தில் மெய்யெழுத்து முதலிலும், உயிரெழுத்து அதன் பின்னரும் இணைந்து ஒலிக்கும்.
4. மெய்யெழுத்துகளின் இனங்களும் மயக்க முறைகளும் (நூற்பா 19 - 30)
தமிழ் எழுத்துகளில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன யாவை என்பதை வகைப்படுத்தி காட்டும் பகுதி இதுவாகும். சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும் முறைகளை (மெய்ம்மயக்கம்) இ்ப்பகுதி ஆழமாக ஆராய்கிறது. எந்தெந்த மெய்களுக்குப் பின் எந்தெந்த எழுத்துகள் வரக்கூடும், எவை வராது என்ற இலக்கணக் கட்டுப்பாடுகளைச் சுட்டிச் செல்வதன் மூலம் சொற்களின் சரியான கட்டமைப்பை இந்நூற்பாக்கள் நமக்கு உணர்த்துகின்றன.
வல்லெழுத்து என்ப க, ச, ட, த, ப, ற
விளக்கம் (நூற்பா 19): க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறும் வல்லின எழுத்துகள் ஆகும்.
மெல்லெழுத்து என்ப ங, ஞ, ண, ந, ம, ன
விளக்கம் (நூற்பா 20): ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய ஆறும் மெல்லின எழுத்துகள் ஆகும்.
இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள
விளக்கம் (நூற்பா 21): ய, ர, ல, வ, ழ, ள ஆகிய ஆறும் இடையின எழுத்துகள் ஆகும்.
அம் மூ ஆறும் வழங்கியல் மருங்கின்
மெய்ம் மயக்கு உடனிலை தெரியும் காலை
விளக்கம் (நூற்பா 22): மேற்கண்ட 18 மெய்யெழுத்துகளும் சொல்லின் இடையில் மயங்கி வரும் (இணைந்து வரும்) முறைகள் இனி விளக்கப்படுகின்றன.
ட, ற, ல, ள என்னும் புள்ளி முன்னர்
க, ச, ப என்னும் மூ எழுத்து உரிய
விளக்கம் (நூற்பா 23): ட், ற், ல், ள் ஆகிய மெய்யெழுத்துகளுக்குப் பின்னால் க, ச, ப ஆகிய எழுத்துகள் மட்டுமே வரும் (வேற்றுநிலை மெய்ம்மயக்கம்).
- வேற்றுநிலை மெய்ம்மயக்கம்: கட்ச, கற்பு (ட், ற், ல், ள் முன் க, ச, ப வருவது).
அவற்றுள்,
ல, ள ஃகான் முன்னர் ய, வ வும் தோன்றும்
விளக்கம் (நூற்பா 24): ல், ள் ஆகிய மெய்களுக்குப் பின்னால் க, ச, ப மட்டுமின்றி ய, வ ஆகிய எழுத்துகளும் வரும்.
ங, ஞ, ண, ந, ம, ன எனும் புள்ளி முன்னர்த்
தம் தம் இசைகள் ஒப்பன நிலையும்
விளக்கம் (நூற்பா 25): மெல்லின மெய்களுக்குப் பின்னால் அவற்றிற்கு இனமான வல்லின எழுத்துகள் வரும் (எ.கா: ங்-க, ஞ்-ச, ண்-ட, ந்-த, ம்-ப, ன்-ற).
- இனவெழுத்து மயக்கம்: திங்கள் (ங் + க), மஞ்சு (ஞ் + ச), கண்டான் (ண் + ட).
அவற்றுள்,
ண, ன ஃகான் முன்னர்க் க, ச, ஞ, ப, ம, ய, வ
ஏழும் உரிய
விளக்கம் (நூற்பா 26): ண், ன் ஆகிய மெய்களுக்குப் பின்னால் க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு எழுத்துகளும் வரும்.
ஞ, ந, ம, வ எனும் புள்ளி முன்னர்
ய, க, ர, ல, ழ, ள என்னா எழுத்தும்
விளக்கம் (நூற்பா 27): ஞ், ந், ம், வ் ஆகிய மெய்களுக்குப் பின்னால் யகரம் வரும் (உடனிலை மற்றும் வேற்றுநிலை மயக்கம்).
- உடனிலை மயக்கம்: தக்காளி, பக்கம் (தம்முன் தாமே வருவது).
மகரப் புள்ளி முன் வவ்வும் தோன்றும்
விளக்கம் (நூற்பா 28): ம் என்ற மெய்யெழுத்திற்குப் பின்னால் வகரமும் வரும்.
ய, ர, ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்
விளக்கம் (நூற்பா 29): ய், ர், ழ் ஆகிய மெய்களுக்குப் பின்னால் மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துகளும், ஙகரமும் வரும்.
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா
விளக்கம் (நூற்பா 30): ர், ழ் ஆகிய மெய்யெழுத்துகள் இரட்டித்து (அதாவது தமக்குப் பின் தாமே) வராது.
5. சுட்டு, வினா எழுத்துகள் மற்றும் முடிவுரை (நூற்பா 31 - 33)
நூல் மரபின் இறுதிக் கட்டமாக, தமிழின் சுட்டு எழுத்துகள் (அ, இ, உ) மற்றும் வினா எழுத்துகள் (ஆ, ஏ, ஓ) எவை என்பதை இந்நூற்பாக்கள் தெளிவுபடுத்துகின்றன. மொழியில் பயன்படுத்தப்படும் அளபெடை முறைகள் மற்றும் ஒற்றெழுத்துகளின் இயல்புகள் குறித்த மேலான இலக்கணக் கோட்பாடுகளை வாசகர்கள் தாங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலுடன் 'நூல் மரபு' பகுதி நிறைவடைகிறது.
அ, இ, உ அம் மூன்றும் சுட்டு
விளக்கம் (நூற்பா 31): அ, இ, உ ஆகிய மூன்று உயிரெழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.
- 'அ' கரம் சேய்மையில் உள்ள பொருளையும்,
- 'இ' கரம் அண்மையில் உள்ள பொருளையும்,
- ஆனால் 'உ' கரம் இவ்விரண்டிற்கும் இடையே உள்ள பொருளையும் சுட்டும்.
அவன், இவன், உவள் சுட்டுப்பெயர்கள்.
ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினா
விளக்கம் (நூற்பா 32): ஆ, ஏ, ஓ ஆகிய மூன்று உயிரெழுத்துகளும் வினா எழுத்துகள் ஆகும்.
- ஏன் வந்தாய்?
- யா(ஆ)ர் அங்கே ?
- நீயோ(ஓ) செய்தாய்?
அளபெடை வகையும், ஒற்று இயல் வகையும்
கிளந்த இயலான் உணர்ந்தனர் கொளலே
விளக்கம் (நூற்பா 33): அளபெடை மற்றும் ஒற்றெழுத்துகள் வரும் முறைகளை மேலே கூறப்பட்ட இலக்கண விதிகளின் அடிப்படையில் அறிந்து கொள்ள வேண்டும்.
- பூவோஒ பூவு, பழமோஒ பழம், கீரையோஒ கீரை,.உடுப்பதூஉம், உண்பதூஉம்
தொல்காப்பியம் நூல் மரபு விரைவுத் குறிப்புகள் (Quick Facts):
- மொத்த நூற்பாக்கள்: தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் முதல் இயலான நூல் மரபில் மொத்தம் 33 நூற்பாக்கள் உள்ளன.
- எழுத்துகளின் தொகை: அகரம் முதல் னகர இறுவாய் உள்ள 30 எழுத்துகள் முதலெழுத்துகள் என நூல் மரபு விளக்குகிறது.
- மாத்திரை அளவுகள்: குறில் எழுத்துகளுக்கு 1 மாத்திரை, நெடில் எழுத்துகளுக்கு 2 மாத்திரை மற்றும் மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை ஆகும்.
- சுட்டு எழுத்துகள்: அ, இ, உ ஆகிய மூன்றும் சுட்டு எழுத்துகள் என நூற்பா 31 குறிப்பிடுகிறது.
- வினா எழுத்துகள்: ஆ, ஏ, ஓ ஆகிய மூன்றும் வினா எழுத்துகள் என நூற்பா 32 விளக்குகிறது.
மேற்கோள்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் (References & External Links)
தொல்காப்பியம் மற்றும் தமிழ் இலக்கணக் குறிப்புகளை மேலும் ஆழமாகப் படிக்க கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளங்களைப் பயன்படுத்தலாம்:
- தமிழ் இணையக் கல்விக்கழகம்: தொல்காப்பிய மூல நூல்களை ஆன்லைனில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
- ப்ராஜக்ட் மதுரை (Project Madurai): தொல்காப்பியம் முழு வடிவத்தைப் பதிவிறக்கம் செய்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
- தமிழ்நாடு பாடநூல் கழகம்: சமச்சீர் கல்வி தமிழ் மற்றும் இலக்கணப் புத்தகங்களைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.
தொடர்புடையவை
🎯 தொல்காப்பியம் - எழுத்துதிகாரம் (நூல் மரபு) - மாதிரித் தேர்வு
1. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை எத்தனை?
2. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தின் முதல் இயலின் பெயர் என்ன?
3. 'நூல் மரபு' பகுதியில் இடம்பெற்றுள்ள மொத்த நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4. தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?
5. அ, இ, உ ஆகிய மூன்றும் எத்தகைய எழுத்துகள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது?
6. ஆ, ஏ, ஓ ஆகிய மூன்றும் தமிழ் இலக்கணப்படி எந்த எழுத்து வகையைச் சேர்ந்தவை?
7. மெய்யெழுத்துகளுக்கு மாத்திரை அளவு என்ன?
8. குற்றெழுத்துகளுக்குரிய மாத்திரை அளவு யாது?
9. வல்லின மெய்யெழுத்துகளின் சரியான வரிசை எது?
10. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
தொல்காப்பியம் தமிழ் மொழியின் மிகப்பழமையான மற்றும் முழுமையாகக் கிடைக்கும் இலக்கண நூலாகும். இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் முதல் இயலான 'நூல் மரபு' பகுதியில் மொத்தம் 33 நூற்பாக்கள் உள்ளன.
முதல் எழுத்துகள் 30 (உயிர் 12 + மெய் 18) மற்றும் 3 சார்பெழுத்துகள் என மொத்தம் 33 எழுத்துகளின் அடிப்படையை நூல் மரபு விளக்குகிறது.


Hi Please, Do not Spam in Comments