மரபுச்சொற்கள் | Marabu Sorgal in Tamil | TNPSC General Tamil Study Guide

ManiMegala 0

TNPSC Group 2, 2A, 4 (VAO), TET போன்ற போட்டித்  தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்) கீழ் (ii) மரபுத் தமிழ் பகுதி எளிதாக மதிப்பெண்களைப் பெற்றுத் தரக்கூடியவை. 

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்) கீழ் (ii) மரபுத் தமிழ் - TNPSC syllabus

  • திணை மரபு - உயர்திணை: அம்மா வந்தது - அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது -மாடுகள் நனைந்தன. 
  • பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது - அவன் வந்தான்: பெண்பால்: அவள் வந்தது - அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் - அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன - அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் - பறவைகள் பறந்தன:
  • காலம்: நேற்று மழை பெய்யும் - நேற்று மழை பெய்தது: நேற்று வருவேன் - நேற்று வந்தேன்: 
  • இளமைப் பெயர்: பசு - கன்று: ஆடு - குட்டி: 
  • ஒலிமரபு: நாய் கத்தியது நாய் குரைத்தது: 
  • வினைமரபு: கூடை - முடை, சோறு - உண்: 
  • தொகை மரபு: மக்கள் - கூட்டம், ஆட்டு - மந்தை:

வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும். 

மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும்.

தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு வரும் சில மரபுகள் குறித்து இங்குக் காண்போம்.

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil old syllabus பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது. 

  1. பிழை திருத்தம்

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

இலக்கண விதிகள் சில 

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம், திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வேண்டும். 

​

📕 TNPSC Previous Year Questions and Answers - மரபுச் சொற்கள்

​
1. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர் CCSE4GT/2024
(A) கூரை வேய்ந்தனர்
(B) கூரை முடைந்தனர்
(C) கூரை செய்தனர்
(D) கூரை வனைந்தார்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) கூரை வேய்ந்தனர்
தமிழ் இலக்கண மரபுப்படி கூரையைப் 'போடுதல்' அல்லது 'செய்தல்' என்பது பிழையாகும்; கூரையை 'வேய்தல்' என்பதே சரியான மரபுச் சொல்லாகும்.
​
2. பிழை திருத்தம் செய்க: மயில் அலறும் குயில் அகவும் ஆந்தை கூவும் CCSE4GT/2024
(A) மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
(B) மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
(C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
(D) மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
உயிரினங்களின் ஒலி மரபுகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள தொடர் இதுவாகும் (மயில்-அகவும், குயில்-கூவும், ஆந்தை-அலறும்).
​
3. ஒலி மரபைக் கண்டறிக: புள் CCSEIVGT/2025
(A) நரலும்
(B) கருவும்
(C) சிமிழ்க்கும்
(D) சீறும்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) நரலும்
தமிழ் இலக்கண மரபுப்படி 'புள்' (பறவை) எழுப்பும் ஒலியைக் குறிக்கும் சொல் 'நரலும்' ஆகும்.
​
4. மரபுத் தொடரைத் தேர்ந்தெடு: காட்டில் சிங்கம் ....................., யானை ..................... CCSEIVGT/2025
(A) அலறும், கத்தும்
(B) உறுமும், பிளிறும்
(C) முழங்கும், பிளிறும்
(D) உறுமும், கத்தும்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (சி) முழங்கும், பிளிறும்
விலங்குகளின் ஒலி மரபுப்படி சிங்கம் 'முழங்கும்' என்றும், யானை 'பிளிறும்' என்றும் அழைக்கப்படுகிறது.
5. "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்" - பாரதியார். இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக: CCSE4GT/2024
(A) திணை வழுவமைதி
(B) பால் வழுவமைதி
(C) மரபு வழுவமைதி
(D) இட வழுவமைதி
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) மரபு வழுவமைதி
குயில் கூவுவதுதான் மரபு, கத்துவது மரபு வழு; எனினும் கவிஞர்களால் கத்துவதாகப் பயன்படுத்தப்படுவது மரபு வழுவமைதி ஆகும்.
6. விலங்குகள் - இளமைப்பெயரைப் பொருத்துக: CCSEIVGT/2025
  • (a) நவ்வி
  • (b) முதலை
  • (c) உடும்பு
  • (d) மீன், கெண்டை
  • 1. சினை
  • 2. ஓந்தி (அல்லது பார்ப்பு)
  • 3. பார்ப்பு
  • 4. மறி
(a)(b)(c)(d)
(A)4321
(B)4132
(C)3412
(D)3421
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) [a-4, b-3, c-2, d-1]
நவ்வி (4) - மறி
முதலை (3) - பார்ப்பு
உடும்பு (2) - ஓந்தி (அல்லது பார்ப்பு)
மீன், கெண்டை (1) - சினை

மரபுச்சொற்கள்

  • நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் குறிப்பதே மரபு எனப்படும்.
  • மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவது மரபுப்பிழை.
  • யானைக்கன்று என்பதே மரபுச்சொல். இதனை யானைக்குட்டி எனக் கூறுவது மரபுப்பிழை.
  • "நாய் கத்தியது" எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல் கூடாது. "நாய் குரைத்தது" என்பதே உரிய மரபுத்தொடர்.

தமிழ்மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.

மரபுத்தொடர்கள் (Tamil Idioms & Phrases)

நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கின்றன. மரபுத்தொடர்களுக்கு நேரடிப் பொருள் கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

மரபு தொடர்கள் பற்றி விரிவான விளக்கம் click here

மரபுச்சொற்கள்

 

இளமை மரபுச்சொற்கள்

காய்களின் இளமை மரபுச்சொற்கள்

  • அவரைப்பிஞ்சு
  • வெள்ளரிப்பிஞ்சு
  • கத்தரிப்பிஞ்சு
  • தென்னங்குரும்பை
  • வாழைக்கச்சல்
  • மாவடு

விலங்குகள் இளமை மரபுச்சொற்கள்

  • குருவிக்குஞ்சு
  • கழுதைக்குட்டி
  • மான்கன்று
  • சிங்கக்குருளை
  • கோழிக்குஞ்சு
  • எருமைக்கன்று
  • நாய்க்குட்டி
  • புலிப்பறழ்
  • ஆட்டுக்குட்டி
  • பன்றிக்குட்டி
  • பூனைக்குட்டி
  • கீரிப்பிள்ளை 
  • குதிரைக்குட்டி 
  • குரங்குக்குட்டி
  • யானைக்கன்று
  • அணிற்பிள்ளை
  • எலிக்குஞ்சு
  • பசுக்கன்று
  • நாய்க் குட்டி
  • புலிக்குட்டி (புலிப்பறழ்)

ஒலி மரபுச்சொற்கள்

பறவைகளின் ஒலி மரபுச்சொற்கள்

  • குயில் கூவும்
  • கிளி கொஞ்சும்
  • மயில் அகவும்
  • கூகை குழறும்
  • காகம் கரையும்
  • ஆந்தை அலறும்
  • கிளி பேசும், கொஞ்சும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • வண்டு முரலும்
  • ஆந்தை அலறும்
  • கழுகுகள் அலறும்
  • குருவி கீச்சிடும்
  • கோட்டான் குழறும் (கூகை) 
  • வாத்து கத்தும்
  • தேனீ ரீங்காரமிடும்
  • குயில் கூவும்

விலங்குகளின் ஒலி மரபுச்சொற்கள்

  • சிங்கம் முழங்கும், கர்ச்சிக்கும் 
  • நரி ஊளையிடும்
  • குதிரை கனைக்கும்
  • யானை பிளிறும்
  • ஆடு கத்தும்
  • எருது எக்காளமிடும்
  • குரங்கு அலப்பும்
  • பூனை சீறும்
  • எலி கீச்சிடும்
  • புலி உறுமும்
  • புறா குனுகும்
  • நாய் குரைக்கும்
  • பாம்பு சீறும்.
  • கழுதைப் புலி கத்தும்
  • கழுதை கத்தும்
  • தவளை கத்தும் 
  • நரி ஊளையிடும் 
  • பசு கதறும் 
  • பன்றி உறுமும்
  • அணில் கீச்சிடும்
  • கரடிகள் உறுமும்

வினைமரபுச்சொற்கள்

  • அப்பம் தின்
  • காய்கறி அரி
  • நெல் தூற்று
  • நீர் பாய்ச்சு
  • களை பறி
  • பாட்டுப் பாடு
  • இலை பறி
  • பழம் தின்
  • மலர் கொய்
  • அம்பு எய்தார்.
  • ஆடை நெய்தார்.
  • உமி கருக்கினாள்.
  • பூப் பறித்தாள்.
  • மரம் வெட்டினான்.
  • மாத்திரை விழுங்கினான்.
  • சோறு உண்டான்.
  • தண்ணீர் குடித்தான்,
  • பால் பருகினாள்.
  • கூடை முடைந்தார்.
  • கூரை வேய்ந்தனர்.
  • சுவர் எழுப்பினான்.
  • முறுக்குத் தின்றான்.
  • நீர் குடித்தான்
  • சோறு உண்
  • முறுக்கு தின்
  • சுவர் எழுப்பு
  • தண்ணீர் குடி
  • பால் பருகு
  • கூடை முடை
  • பூக் கொய்
  • இலை பறி
  • பானை வனை

பெயர்களுக்கு பொருத்தமான வினைகள்

  • காய்கறியை அரி 
  • மரம் வெட்டு
  • அப்பம் தின்
  • ஏர் உழு 
  • கதிர் அறு
  • நார் கிழி
  •  கிளையை ஒடி
  • களைபறி
  • கல்உடை
  • இலை பறி
  • கூரை வேய்
  • அம்பு எய் 
  • சந்தனம் பூசு
  •  சோறு உண்
  • வரப்புக் கட்டு
  • விதையை விதை 
  • தாள் அடி
  • பழம் தின் 
  • மணி அடி
  • படம் வரை
  • தோசை சுடு
  • இட்லி அவி 
  • நீர் அருந்து
  • தேனை நக்கு
  •  நீர் பாய்ச்சு
  • விளக்கு ஏற்று
  • நெல் தூற்று 
  • பாட்டுப் பாடு
  • திரியைக் கொளுத்து
  • குடம் வனை
  • விடை கூறு 
  • தயிர் கடை
  • கோலம் இடு
  • சோறு சமை
  • பாய் பின்னு
  • கூடை முடை
  • விதையை விதை
  • தீ மூட்டு 
  • ஓவியம் வரை
  • சந்தனம் பூசு
  • வண்ணம் தீட்டினார்

தாவரங்களின் உறுப்புப்பெயர் மரபுச் சொற்கள்

  • மா, பலா, வாழை - இலை
  • ஈச்சம், தென்னை, பனை - ஓலை
  • கம்பு, கேழ்வரகு, சோளம் - தட்டை
  • நெல், புல், தினை - தாள்
  • அவரை, கத்தரி, முருங்கை, வெள்ளரி - பிஞ்சு
  • சோளத் தட்டு
  • நெல்தாள்
  • ஆவரங்குழை 
  • கேழ்வரகுத் தட்டை
  • வாழைத் தண்டு
  • கம்பந்தட்டு
  • ஈச்ச ஓலை
  • தினைத்தாள் 
  • பலா இலை
  • தென்னை ஓலை

பூ

  • அரும்பு: தோற்றநிலை
  • முகை(மொட்டு): விரியத் தொடங்கும் நிலை
  • மலர்(அலர்): மலர்ந்த நிலை
  • வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை
  • செம்மல்: வாடின நிலை

தாவரத்தின் அடி

  • தாள்: நெல், கேழ்வரகு
  • தண்டு: கீரை, வாழை
  • கோல்: நெட்டி,மிளகாய்ச்செடி
  • தூறு: குத்துச்செடி,புதர்
  • தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம்
  • கழி : கரும்பின் அடி
  • கழை : மூங்கிலின் அடி
  • அடி: புளி, வேம்பு

தாவரத்தின் பிஞ்சு

  • பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
  • பிஞ்சு: இளம் காய்
  • வடு: மாம்பிஞ்சு
  • மூசு: பலாப்பிஞ்சு
  • கவ்வை: எள்பிஞ்சு
  • குரும்பை: தென்னை, பனை
  • முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
  • இளநீர்: முற்றாத தேங்காய்
  • நுழாய்: இளம்பாக்கு
  • கருக்கல்: இளநெல்
  • கச்சல்: வாழைப்பிஞ்சு

கெட்டுப்போன கனி


  • சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல்: சுருங்கிய பழம்
  • சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
  • வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு
  • அளியல்: குளுகுளுத்த பழம்
  • அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
  • சொண்டு: பதராய்ப் போன மிளகாய்

கெட்டுப்போன காய்

  • கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்
  • தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
  • அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்

தாவரங்களின் இளம் பருவம்

  • நாற்று: நெல், கத்தரி
  • கன்று: மா, புளி, வாழை
  • குருத்து: வாழையில்
  • பிள்ளை: தென்னையின்
  • மடலி அல்லது வடலி: பனையின்
  • பைங்கூழ்: நெல், சோளம்

கொழுந்து வகை

  • துளிர் அல்லது தளிர்: நெல், புல்
  • முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு
  • குருத்து : சோளம், கரும்பு, தென்னை, பனை
  • கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.

தாவரங்களின் குலை வகை

  • கொத்து: அவரை, துவரை
  • குலை: கொடி முந்திரி
  • தாறு: வாழைக் குலை
  • கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்;
  • அலகு அல்லது குரல்: நெல்,தினை முதலியவற்றின் கதிர்:
  • சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி.

தாவரங்களின் கிளைப்பிரிவுகள்

  • கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
  • கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு:
  • கிளை: கொம்பின் பிரிவு:
  • சினை: கிளையின் பிரிவு:
  • போத்து: சினையின் பிரிவு:
  • குச்சு: போத்தின் பிரிவு:
  • இணுக்கு: குச்சியின் பிரிவு.

தொகை மரபு (Group Traditional Words)

பல பொருட்கள், உயிரினங்கள் அல்லது மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் குழுவைக் குறிப்பதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய மரபுச்சொற்களே தொகை மரபு எனப்படும்.


முக்கிய தொகை மரபுச் சொற்கள்:

  • மக்கள் – கூட்டம் (மக்கள் கூட்டம்)
  • பசு / ஆடு – மந்தை (ஆட்டு மந்தை, பசுவின் மந்தை)
  • ஆ (பசுக்கள்) – நிரை (ஆநிரை)
  • யானை – கூட்டம் (யானைக் கூட்டம்)
  • பறவை – கூட்டம் (பறவைக் கூட்டம்)
  • வண்டு – க் கூட்டம் / மொய்ப்பு (வண்டின் கூட்டம்)
  • எறும்பு – மொய்ப்பு / படை (எறும்பு மொய்ப்பு / எறும்புப் படை)
  • திராட்சை – குலை (திராட்சைக் குலை)
  • சாவி – கொத்து (சாவிக்கொத்து)
  • வைக்கோல் – போர் (வைக்கோற்போர்)
  • விறகு – கட்டு (விறகுக் கட்டு)
  • கல் – குவியல் (கற்குவியல்)
  • நட்சத்திரம் / விண்மீன் – தொகுதி (விண்மீன் தொகுதி)

பயிற்சி வினாக்கள் (Practice Questions):

  1. ஆட்டு ________ (மந்தை / கூட்டம்) – விடை: மந்தை
  2. மக்கள் ________ (திரள் / கூட்டம்) – விடை: கூட்டம்
  3. ஆ ________ (நிரை / மந்தை) – விடை: நிரை
  4. சாவி ________ (கட்டு / கொத்து) – விடை: கொத்து
  5. வைக்கோல் ________ (குவியல் / போர்) – விடை: போர்

மேலும் சில முக்கிய தொகை மரபுச் சொற்கள்

1. மனிதர்கள் & உயிரினங்கள்:

  • வீரர்கள் – படை (வீரர் படை)
  • உறவினர்கள் – சுற்றம் (சுற்றத்தார்)
  • யானை – கூட்டம் (யானைக் கூட்டம்)
  • சிங்கம் – கூட்டம் (சிங்கக் கூட்டம்)
  • நரி – க்கூட்டம் (நரிக்கூட்டம்)
  • மீன் – க்கூட்டம் (மீன்கூட்டம்)
  • பறவை – க்கூட்டம் (பறவைக்கூட்டம்)
  • நண்டு – க்கூட்டம் (நண்டுக்கூட்டம்)

2. தாவரங்கள் & தாவரப் பொருட்கள்:

  • வாழை – த்தோட்டம் (வாழைத்தோட்டம்)
  • தென்னை – ந்தோப்பு (தென்னந்தோப்பு)
  • மா – ந்தோப்பு (மாந்தோப்பு)
  • கரும்பு – ந்தோட்டம் (கரும்பந்தோட்டம்)
  • நெல் – வயல் (நெல்வயல்)
  • பூ – ஞ்சோலை / கொத்து (பூஞ்சோலை / பூங்கொத்து)
  • காய் / கனி – க்குலை (காய்க்குலை / கனிக்குலை)
  • வெற்றிலை – க்கட்டு (வெற்றிலைக்கட்டு)

3. பொருட்கள் & இயற்கை:

  • மண் / மணல் – மேடு / குவியல் (மணற்குவியல்)
  • நாணயம் / காசு – க்கட்டணம் / குவியல் (காசுக்குவியல்)
  • துணி – க்கட்டு (துணிக்கட்டு)
  • நெல் – க்குவியல் (நெற்குவியல்)
  • மலை – த்தொடர் (மலைத்தொடர்)
  • மரங்கள் – காடு / சோலை (மரக்காடு / மரச்சோலை)

TNPSC தேர்வுக்கான கூடுதல் வினா - விடைகள்:

  1. பொருத்துக:
    • தென்னை – தோப்பு
    • யானை – கூட்டம்
    • விறகு – கட்டு
    • விண்மீன் – தொகுதி
  2. சரியான தொகை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு:
    கரும்பு ________ (தோட்டம் / தோப்பு)
    விடை: தோட்டம்
  3. பிழை திருத்துக:
    வினா: தென்னந்தோட்டத்தில் மாட்டுக்கூட்டம் மேய்ந்தது.
    விடை: தென்னந்தோப்பில் ஆட்டுமந்தை / ஆநிரை மேய்ந்தது.
  • மக்கள் கூட்டம்
  • ஆநிரை
  • ஆட்டு மந்தை

பூச்சிகள், பறவைகள், விலங்குகள் - இருப்பிட தொகை மரபுச் சொற்கள்

  • கரையான் புற்று
  • ஆட்டுப் பட்டி
  • குதிரைக் கொட்டில்
  • மாட்டுத் தொழுவம்
  • கோழிப் பண்ணை
  • குருவிக் கூடு
  • சிலந்தி வலை
  • எலி வளை
  • நண்டு வளை
  • யானைக்கூடம்

செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம் - தொகை மரபு 

  • பூஞ்சோலை
  • பூந்தோட்டம்
  • வாழைத் தோட்டம் 
  • வெற்றிலைத் தோட்டம் 
  • கம்பங்கொல்லை
  • சோளக் கொல்லை
  • மாந்தோப்பு
  • தென்னந்தோப்பு
  • பனங்காடு
  • வேலங்காடு 
  • கொய்யாத் தோப்பு
  • நெல்வயல்
  • தேயிலைத் தோட்டம் 
  • முந்திரித் தோப்பு
  • பலாத் தோப்பு
  • ஆலங்காடு
  • இலுப்பைத் தோட்டம்
  • சவுக்குத் தோப்பு
  • புளியந்தோப்பு

மரபுப்பிழை 

📕 TNPSC இலக்கணக் குறிப்பு - மரபுப் பிழை & மரபு வழுவமைதி (விளக்கம்)

​1. மரபுப் பிழை என்றால் என்ன? (Marabu Pizhai)

  • ​இலக்கண விளக்கம்: நம் முன்னோர் சொற்களை எந்தப் பொருளில், எப்படிப் பயன்படுத்தினார்களோ அப்படியே நாமும் பயன்படுத்த வேண்டும். அதில் மாற்றம் செய்வது 'மரபுப் பிழை' எனப்படும்.
  • ​சான்றுகள் (எடுத்துக்காட்டுகள்):
    • ​பூவைப் பறித்தான் → பூக் கொய்தான் (சரியான மரபு)
    • ​கூரை போட்டனர் → கூரை வேய்ந்தனர் (சரியான மரபு)
    • ​ஆந்தை கத்தியது → ஆந்தை அலறியது (சரியான மரபு)

​2. மரபு வழுவமைதி என்றால் என்ன? (Marabu Vazhuvamaidhi)

  • ​இலக்கண விளக்கம்: இலக்கண முறைப்படி மரபுப் பிழையாக இருந்தாலும், கவிஞர்களின் உள்ளக் கிடக்கை காரணமாகவும், செய்யுள் நயத்திற்காகவும் அது பிழையாகக் கருதப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுவது 'மரபு வழுவமைதி' எனப்படும்.
  • ​எடுத்துக்காட்டு & TNPSC வினா:
    • ​சான்று: "கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்" - பாரதியார்.
    • ​விளக்கம்: குயில் 'கூவுவது' தான் மரபுச் சொல். ஆனால், கவிஞர் பாரதியார் 'கத்தும் குயிலோசை' என்று எழுதியுள்ளார். இலக்கணப்படி இது மரபு வழு என்றாலும், கவித்துவச் சிறப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது மரபு வழுவமைதி ஆகும். 

நினைவுகூர்க

பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.


மதிப்பீடு

1. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. கோழி கொக்கரிக்கும் (கூவும் / கொக்கரிக்கும்)
  2. பால் பருகு (குடி / பருகு)
  3. சோறு உண் (தின் / உண்)
  4. பூ கொய் (கொய் / பறி)
  5. ஆ நிரை (நிரை / மந்தை)

2. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

வினா: சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பரிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்துகொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

சரியான விடை:
சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக் கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.


உள் இணைப்புகள் (Internal Links)

🎯 மரபுச்சொற்கள் & பிழை திருத்தம் - முழு மாதிரித் தேர்வு (10 வினாக்கள்)

1. 'பூவைப் பறித்தான்' - இத்தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கிச் சரியான தொடரை எழுதுக:

2. "கத்துங் குயிலோசை" - இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதி யாது?

3. 'ஆடு' என்பதன் இளமைப் பெயர் என்ன?

4. 'புலி' என்பதன் சரியான ஒலிமரபுச் சொல் எது?

5. பிழையான வினைமரபுத் தொடரைக் கண்டறிக:

6. 'மடலேறுதல்' என்னும் மரபுத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?

7. 'எறும்பு' என்பதன் கூட்டத்தைக் குறிக்கும் தொகை மரபுச் சொல் எது?

8. 'மாடு கத்தியது' - இத்தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கிச் சரியான தொடரை எழுதுக:

9. 'அம்மா வந்தது' - எவ்வகை மரபுப் பிழைக் குறிப்பு?

10. 'சோறு உண்' - இத்தொடர் எவ்வகை மரபுச் சொல்லைச் சார்ந்தது?

🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

❓ அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (FAQ)

Q1: மரபு வழுவமைதி என்றால் என்ன?
இலக்கண முறைப்படி மரபுப் பிழையாக இருந்தாலும், கவிஞர்களின் உள்ளக் கிடக்கை காரணமாகவும் செய்யுள் நயத்திற்காகவும் அது பிழையாகக் கருதப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுவது மரபு வழுவமைதி எனப்படும்.
Q2: TNPSC தேர்வுகளில் மரபுத் தமிழ் எந்தப் பகுதியில் இடம்பெறுகிறது?
TNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் பகுதி 'அ' (இலக்கணம்) கீழ்வரும் பிழை திருத்தம் மற்றும் எழுதும் திறன் பகுதியின் கீழ் மரபுச்சொற்கள், ஒலிமரபு, வினைமரபு வினாக்கள் கேட்கப்படுகின்றன.
Q3: திணை மரபுப் பிழைக்கு உதாரணம் தருக?
உயர்திணைக்கு அஃறிணை விகுதியைப் பயன்படுத்துவது திணை மரபுப் பிழையாகும். (எ.கா: அம்மா வந்தது என்பது தவறு; அம்மா வந்தாள் என்பதே சரியான மரபு).
Q4: ஒலி மரபு என்றால் என்ன?
பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்கள் எழுப்பும் ஒலிகளை நம் முன்னோர் எவ்வாறு கூறிச் சென்றார்களோ, அந்த முறை மாறாமல் குறிப்பிடுவது ஒலி மரபு எனப்படும். (எ.கா: நாய் குரைத்தது).

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.