TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வில் பொதுத்தமிழ் அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் பிரிவில் 15 கேள்விகள் கட்டாயம் இடம்பெறும். இதில் முழு மதிப்பெண் பெற தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய செய்திகள் மற்றும் 96 வகையான சிற்றிலக்கியங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
எனவே, தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்ச் சான்றோர் ஆகிய திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சிற்றிலக்கியத்தில் ஒன்றான குற்றால குறவஞ்சி பற்றி 6 வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குற்றாலக் குறவஞ்சி என்ற தலைப்பின் முழுமையான குறிப்புகள், சொல்லும் பொருளும், பாடலின் பொருள், நூல்வெளி மற்றும் மதிப்பீட்டு வினா-விடைகள் கீழே முழுமையாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
TNPSC எழுதுவோர் தெரிந்து கொள்வதற்காக previous year questions and answers, திரிகூட ராசப்ப கவிராயர் பற்றிய வரலாறு, குற்றால குறவஞ்சி நூல் குறித்த தகவல்கள், Free PDF download, மற்றும் படித்ததை நினைவு கூர்ந்து பார்க்க model question அடங்கிய QUIZ உங்களுக்காக இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
திரிகூடராசப்ப கவிராயர்
குற்றாலக் குறவஞ்சி பாடியவர்
குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார்.
இருநூற்றைம்பது(250) வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல் குற்றாலக் குறவஞ்சி.
Class 8 Tamil திருக்குற்றாலக் குறவஞ்சி-Singi Petra Parisu | TNPSC Notes
திரிகூடராசப்ப கவிராயர் நூல்கள்
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- திருக்குற்றால கோவை
- திருக்குற்றால உலா
- திருக்குற்றாலக்பிள்ளைத் தமிழ்
- திருக்குற்றாலத்தல புராணம்
குற்றாலக் குறவஞ்சி
இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது.
குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் குற்றால மலையின் வளம்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்.
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!
- திரிகூட ராசப்பக் கவிராயர்(code-box)
பொருள்
குற்றால மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும்.
உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும்.
அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள்.
உயர்ந்த எங்கள் மலையில் உள்ள கானவர்கள் வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பார்கள்.
சித்தர்கள், இறப்பை நீக்கும் மூலிகைகளை எங்கள் மலையில் வளர்த்து வருவார்கள்.
அருவியின் அலை உயர்ந்து எழும்பி வானத்தையே தொடும்.
அந்த அலை நீரில் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும் நேரின் சக்கரங்களும் வழுக்கிவிழும்.
வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை.
எங்கள் நாட்டில் மக்கள் அஞ்சி ஓடிப்போவது இல்லை; வெள்ளம்தான் ஓடும்.
மக்கள் இங்கு ஒடுங்கி இருப்பதில்லை; தவம் செய்வோரின் உள்ளம்தான் ஒடுங்கி இருக்கும்.
மக்கள் இங்கு நோய், வறுமையால் வாடுவது இல்லை; பெண்களின் மெல்லிடை மட்டுமே வாடும்.
மக்கள் இங்கு வருந்துவது இல்லை; முத்துகளை ஈனும் சங்குகள் மட்டுமே வருந்துகின்றன.
என்இங்குப் பயன் அற்றவை என எவையும் தூக்கிப் போடப்படுவது இல்லை; விதைகள் மட்டுமே மண்ணில் போடப்படுகின்றன.
மக்கள் இங்கே துன்பத்தில் புலம்புவது இல்லை; குழந்தைகள் காலில் அணியும் கிண்கிணிகளே புலம்பல் ஒலி எழுப்புகின்றன.
மக்கள் இங்கே செல்வங்களைத் தேடி அலைவதில்லை; அறம், பெருமை இரண்டை மட்டுமே மக்கள் இங்குத் தேடுவார்கள்.
குற்றாலநாதராகிய சிவபெருமான் வாழும் நாடு எங்கள் நாடு.
இவ்வாறு குறத்தி, தன் மலைவளமும் நாட்டுவளமும் குறித்துக் கூறுகிறாள்.
சொல்பொருள்
வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது;
மந்தி - பெண் குரங்கு;
வான்கவிகள் - தேவர்கள்;
கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்;
காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை;
பரிக்கால் - குதிரைக்கால்;
கூனல் - வளைந்த;
வேணி - சடை.
மின்னார் - பெண்கள்;
மருங்கு - இடை;
சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise குற்றாலக் குறவஞ்சி மதிப்பீடு
ஓரிரு சொற்களில் விடை தருக.
அ. புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
ஆ. திருக்குற்றால மக்கள் தேடுவது அறம், பெருமை
பொருள் எழுதுக
அ. கூனல் - வளைந்த
1. பொருத்துக (மலைவளம் & காட்சிகள்)
| பொருத்துக வினா | சரியான விடை |
|---|---|
| 1. ஓடக் காண்பது | பூம்புனல் வெள்ளம் |
| 2. ஒடுங்கக் காண்பது | யோகியர் உள்ளம் |
| 3. வாடக் காண்பது | மின்னார் மருங்கு |
| 4. வருந்தக் காண்பது | சூல்உளைச் சங்கு |
2. பொருத்துக (சொல்லும் பொருளும் - 1)
| பொருத்துக வினா | சரியான விடை |
|---|---|
| 1. மந்தி | பெண் குரங்கு |
| 2. வான்கவிகள் | தேவர்கள் |
| 3. பரிக்கால் | குதிரைக்கால் |
| 4. கூனல் | வளைந்த |
3. பொருத்துக (சொல்லும் பொருளும் - 2)
| பொருத்துக வினா | சரியான விடை |
|---|---|
| 1. வேணி | சடை |
| 2. மின்னார் | பெண்கள் |
| 3. மருங்கு | இடை |
| 4. சூல்உளை | கருவைத் தாங்கும் துன்பம் |
🎯 திருக்குற்றாலக் குறவஞ்சி & சிற்றிலக்கியங்கள் - TNPSC மாதிரித் தேர்வு
1. பொருத்துக: ஓடக் காண்பது - ?
2. குற்றாலக் குறவஞ்சி எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?
3. வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் யார்?
4. மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை என்று அறியப்படுவது எது?
5. பொருத்துக: மந்தி என்பதன் சரியான பொருள் என்ன?
6. வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்து குற்றாலமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்?
7. திரிகூடராசப்பக் கவிராயர் நூல்களில் பொருந்தாதது (அல்லது அவர் இயற்றாதது) எது?
8. திருக்குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?
9. திரிகூட ராசப்பக் கவிராயர் பிறந்த ஊர் எது?
10. திருக்குற்றாலத் தலபுராணம் பாடியவர் யார்?


Hi Please, Do not Spam in Comments